2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

குற்ற-பயங்கரவாத இணைப்பால் பாதுகாப்பு சவால்கள்

Editorial   / 2021 நவம்பர் 28 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்சர்டம்(நெதர்லேன்ட்ஸ்):

பயங்கரவாதத்தின் தன்மையை மாற்றுவதால் ஏற்படும் அச்சுறுத்தல்களை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளதுடன், பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கும் எவ்வாறு தடைகளை உருவாக்கும் என்பதையும்  நெதர்லாந்தை தளமாகக் கொண்ட ஒரு சிந்தனைக் குழு வெளிக்காட்டியுள்ளது. குற்றம்-பயங்கரவாத இணைப்பு சர்வதேசத்துக்கு பல்வேறுபட்ட பாதுகாப்பு சவால்களை உருவாக்குகிறது என்றும் அது குறிப்பிடுகிறது.

9ஃ11 தாக்குதல்கள், சர்வதேச பாதுகாப்பு மற்றும் உலகளாவிய, பிராந்திய மற்றும் உள்ளூர் அரசியல் ஒழுங்குகளை மறுவடிவமைக்க விரும்பும் அரசுசாரா செயல்பாட்டாளர்களின் திறன் மற்றும் அணுகல் பற்றிய சொற்பொழிவுகள், நாடுகடந்த மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை முன்னணியில் வைத்தது என்று தெற்காசிய ஆய்வுகளுக்கான ஐரோப்பிய அறக்கட்டளை (EFSAS) தெரிவித்தது.

பனிப்போரின் விளைவாக மொஸ்கோ மற்றும் வோஷிங்டன் ஆகிய இரண்டும் மற்ற வல்லரசுகளை எதிர்த்த குழுக்களுக்கும் பிரிவுகளுக்கும் ஆதரவு அளித்தன. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி மற்றும் 9ஃ11 க்குப் பிறகு இஸ்லாமிய பயங்கரவாதத்தின் மீதான உலகளாவிய ஒடுக்குமுறையுடன் இணைந்து அமெரிக்க ஒருமைப்பாடு தோன்றிய சகாப்தம். குழுக்கள் முன்பு செய்தது போல் இனி அரசுகளின் ஆதரவை நம்ப முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியது.  இ.எஃப்.எஸ்.ஏ.எஸ்ஸின் (EFSAS) கூற்றுப்படி, குழுக்களுக்கான அரச ஆதரவின் அளவு குறைவது குற்ற-பயங்கரவாத தொடர்பு என்று அழைக்கப்படுவதற்கு வழிவகுத்தது, இது குழுக்கள் மற்றும் குற்றவியல் அமைப்புகளுக்கு இடையேயான நெருக்கத்தைக் குறிக்கிறது.

உலகெங்கிலும் உள்ள குழுக்கள் மற்றும் குற்றவியல் அமைப்புக்கள் உட்பட அரசு அல்லாத நிறுவனங்களுக்கு நிதி மற்றும் நிதியைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் எப்போதும் முதன்மையான கவலையாக இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ் பிராந்திய எல்லையின் உச்சத்தில் இருந்ததாகவும், அது வீழ்ச்சியைத் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகவும் உதாரணத்தை மேற்கோள் காட்டி சிந்தனைக் குழு கூறியது.

ஈராக் மற்றும் சிரியா என்பன ஐ.எஸ்.ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் வருமானத்தை அக்குழுவே பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தன.  

ஐ.எஸ்.ஐ.எஸ், பிராந்திய ஆதாயங்களைப் பெறுவதற்கு முன்னர் அதிக மற்றும்  சிறிய குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், பிராந்தியக் கட்டுப்பாட்டில் ஏற்பட்ட சரிவு, தொடர்ந்தும் வழக்கமான குற்றச் செயல்களுக்கு வழிவகுத்ததாகவும் அவ்வறிக்கை மேலும் கூறியது.

அறிக்கையின்படி, ஐ.எஸ்.ஐ.எஸ் மற்ற வழக்கமான  குற்றச் செயல்களிலும் ஈடுபட்டு வந்தது, இதில் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், கொள்ளை மற்றும் திருட்டு ஆகியவை அடங்கும்.

குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்கள், ஒரு குறிப்பிடத்தக்க அதிகாரத் தளம் அல்லது குறிப்பிடத்தக்க பிராந்தியக் கட்டுப்பாட்டின்றி நீண்ட காலத்திற்கு இத்தகைய குறைந்த அளவிலான நடவடிக்கைகளைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்றும் அறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் எழுச்சி, வீழ்ச்சி மற்றும் இறுதி உயிர்வாழ்வு ஆகியவை குற்றம்-பயங்கரவாத தொடர்பை உள்ளடக்கியது. இந்த தொடர்புக்கு சவால் விடுவதில் சிரமங்கள் உண்டு என்று அறிக்கை  மேலும் கூறியது.

குற்ற-பயங்கரவாத இணைப்பு கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கும் ஒரு குறிப்பிடத்தக்க சவாலை முன்வைக்கிறது என்றும் சிந்தனைக் குழு எடுத்துக்காட்டுகிறது.

 வர்த்தகத் தடைகளை ஒழிப்பது, தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் நிதி நோக்கங்களுக்காக குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களின் வளர்ந்து வரும் நிலைமை ஆகியவற்றுடன், குற்றவியல் அமைப்புக்கள் மற்றும் குழுக்களுக்கு இடையிலான கருத்தாக்க மற்றும் நடைமுறை நிலைமைகள் பெரிய அளவில் மங்கலாகிவிட்டன

'வழக்குகளிலிருந்து-வழக்கு வேறுபாடுகள் இங்கே செய்யப்பட வேண்டும்: குற்றவியல் ஈடுபாட்டின் அளவு மற்றும் உந்துதல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வேறுபடலாம் மற்றும் பல்வேறு வெளிப்புற மற்றும் கருத்தாக்க நிலைமைகளால் வடிவமைக்கப்படலாம்.

ஐஎஸ்ஐஎஸ் விடயத்தில், சில வகையான குற்றவியல் நடத்தைகளில் ஈடுபடுவதற்கான கருத்தாக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஆயினும் குற்றவியல் நடத்தையில் ஈடுபடுவதும், அதற்கான அரசியல் பதில்களை உருவாக்குவதும் கடினம் என்பதும், குற்றம்-பயங்கரவாத இணைப்பு 21 ஆம் நூற்றாண்டுக்கு வேறுபட்ட பாதுகாப்பு சவால்களை உருவாக்குகிறது என்பதையும் குறிக்கிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X