Shanmugan Murugavel / 2021 ஜூன் 19 , பி.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஈரானின் எட்டாவது ஜனாதிபதியாக, கடும்போக்குவாத நீதித்துறைத் தலைவரான இப்ராஹிம் றைசி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு உள்நாட்டமைச்சு அறிவித்துள்ளது.
48.8 சதவீதமாக காணப்பட்ட வாக்களிப்பு வீதத்தில், 61.95 சதவீதமான வாக்குகளை றைசி வென்றுள்ளதாக உள்நாட்டமைச்சு இன்று அறிவித்துள்ளது.
1979ஆம் ஆண்டு புரட்சிக்குப் பின்னரான ஜனாதிபதித் தேர்தல் ஒன்றுக்கான குறைந்தளவு வாக்களிப்பு இதுவாகும். 28,933,004 வாக்குகளை றைசி பெற்றிருந்தார்.
தேர்தலில் இரண்டாவது இடத்தில் 3,726,870 வாக்குகளுடன் வலிதற்ற வாக்குகள் காணப்பட்டிருந்தன. இஸ்லாமியக் குடியரசு உருவாக்கப்பட்ட பின்னர் இவ்வாறு இடம்பெறுவது இதுவே முதற்தடவையாகும்.
நேற்று இடம்பெற்ற இத்தேர்தலில் மூன்றாமிடத்தை முன்னாள் புரட்சிகர காவலர் தளபதி மொஹ்சென் றெஸயி பெற்றிருந்தார். நான்காமிடத்தை, 2,427,201 வாக்குகளுடன் மிதவாத வேட்பாளரான அப்துல்நஸாவர் ஹெம்மடியும், ஐந்தாமிடத்தை 999,718 வாக்குகளுடன் கடும்போக்குவாதி அமிர் ஹொஸெய்ன் கஸிஸடெஹ் ஹஷெமியும் பெற்றனர்.
இந்நிலையில், இவ்வாண்டு ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் றைசி பதவியேற்கவுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டிலேயே ஐக்கி அமெரிக்காவால் தடை செய்யப்பட்டவராக றைசி காணப்படுகின்றார்.
4 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago