2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சொந்த செயலி; ட்ரம்ப் அதிரடி

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 22 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ”ட்ருத் ஷோஷல்” (Truth Social) என்ற பெயரில் செயலியொன்றைத் தொடங்கியுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 2 ஆவது முறையாகப்  போட்டியிட்ட ட்ரம்ப் தோல்வியடைந்தார்.இதையடுத்து ஜனாதிபதியாகத்  தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு எதிராக ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் ஊடாக  தனது எதிர்ப்பைத் தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் ட்ரம்ப் பேசுவதாகக் குறிப்பிட்டு ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவரது கணக்கு முடக்கப்பட்டது.

இதனையடுத்து அவற்றிலிருந்து வெளியேறிய அவர் தனது கருத்துகளைத் தெரிவிப்பதற்காகக் குறித்த செயலியை உருவாக்கியுள்ளார்.

இச் செயலி அடுத்த முதல் காலாண்டிற்குள் செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .