Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 17 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவில் தேவாலயத்துக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினர் டேவிட் அமேஸ்ஸை(David Amess )கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் 38 ஆண்டுகளாக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி.யாக இருந்தவர் டேவிட் அமேஸ். 69 வயதான இவர் நேற்று முன்தினம் (15) தனது சொந்த தொகுதியான எசக்ஸ் நகரில் உள்ள தேவலாயத்துக்கு சென்ற போது அங்கிருந்த மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்நிலையில் தேவலாயத்துக்குள் கத்தியுடன் நுழைந்த நபர் ஒருவர் திடீரென அமேசை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனார் இரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் கத்தியால் குத்திய நபரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
மேலும் இச்சம்பவம் ஒரு பயங்கரவாத செயல் என்று அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago