2022 ஜனவரி 25, செவ்வாய்க்கிழமை

முகத்தை வழங்கினால் நீங்களும் கோடிஸ்வரர் ஆகலாம்

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 01 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவை சேர்ந்த ரோபோ தயாரிக்கும் நிறுவனமான ப்ரோமோபோட் (Promobot) ,மனித உருவிலான ரோபோக்களைத்  தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் அந்நிறுவனமானது அண்மையில் புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிவிப்பில் மனித வடிவில் உள்ள ரோபோக்களைத் தயாரிப்பதற்காக  மனிதர்களின் முக மாதிரிகள் தேவைப்படுவதாகவும், அவ்வாறு முக மாதிரிகளை வழங்குவோருக்கு 2,00,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்  அவ்வாறு தங்கள் முகமாதிரிகளைக்  கொடுக்க முன்வருபவர்களுக்கு சில நிபந்தனைகளையும் அந்நிறுவனம் விதித்துள்ளது.

குறிப்பாக  25 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும், எனவும், அவரது குரலை அந்த ரோபோவிற்கு பதிவு செய்ய குறைந்தது 100 மணி நேரம் வார்த்தைகளை கூற வேண்டும் எனவும்   தெரிவிக்கப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X