2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

அதிக நேரம் பணிபுரிந்தால் ஓடிவிடும் ‘ மவுஸ்‘

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 14 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான சம்சுங் ‘பேலன்ஸ் மவுஸ்’, எனும் கணினி மவுஸை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த மவுஸின் சிறப்பம்சம் என்னவென்றால், திட்டமிடப்பட்ட அலுவலக நேரத்திற்குப் பிறகு மவுஸ் தானே வேலை செய்வதை நிறுத்திவிடும்.

இதன்மூலம் பயனர்கள் வேலை நேரம் தாண்டி அதிக வேலை செய்வதை இந்த சாதனம் தடுக்கிறது.

இது குறித்து ”  கொரிய நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில்  பயனர் வேலை நேரத்தை மீறி பணி செய்ய முற்படும்போது கணினி மவுஸ் மேசையிலிருந்து ஓடுவதைக் காட்சி படுத்தி வெளியிட்டுள்ளனர். 

இந்நிலையில் இம் மவுஸ் ஆனது  மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .