Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 13 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகப் பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனத்தின் ஸ்தாபகருமான ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos ) சாகா வாரத்திற்கான ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார் என பிரபல ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது,
இதற்காக அவர் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆராய்ச்சி நிறுவனமான அல்டொஸ் லப்ஸில்( Altos Labs) பல கோடிகளை முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதர்கள் சாகாமல் எப்போதும் இளமையாகவே இருக்க வைப்பதற்கான ஆராய்ச்சிகளை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. பொதுவாக மனிதர்களுக்கு உடலில் இருக்கும் செல்கள் வளர்ந்து அது பெரிதாகிப் பல பிரிவுகளாகப் பிரிந்து அந்த செல்களும் வளர்ந்து பின் அது செயல் இழந்து இறந்து மடியும்.
ஒருவேளை இச் செல்களை வயதாக விடாமல், இளைமையாகவே வைத்து இருந்தால் எப்படி இருக்கும். என்பதைக் கேட்பதற்கு மிகவும் எளிது என்றாலும், இதைச் சாதிப்பது என்பது அவ்வளவு எளிது கிடையாது. முதலில் விலங்குகளில் இருக்கும் செல்களை இதுபோல புதுப்பித்து மீண்டும் உயிர்பெற வைக்கும் ஆராய்ச்சிகளைச் செய்ய வேண்டும். அதில் பின்விளைவுகள் ஏதும் இல்லை என்றால் மட்டுமே நாம் அதை மனித உடல்களில் செயல்படுத்த முடியும்.
இவ் ஆராய்ச்சியைத் தான் தற்போது அட்லாஸ் லேப் நிறுவனம் செய்து வருகிறது. ஏற்கனவே யூனிட்டி டெக்னலாஜி என்ற நிறுவனத்தில் இதேபோல் Jeff Bezos சாகா வரம் குறித்த ஆராய்ச்சிக்கு முதலீடு செய்துள்ளார்.
உலக பணக்காரர் வரிசையில், கடந்த ஓகஸ்ட் மாதம் வெளியிட்ட தகவலின் படி ஜெஃப் பெசோஸ் 192.8 பில்லியன் அமெரிக்க டொலருடன் இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
25 minute ago
32 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
32 minute ago
53 minute ago