Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Ilango Bharathy / 2021 டிசெம்பர் 03 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகில் மக்கள் வாழ அதிக செலவாகும் நகரம் குறித்து அண்மையில் கருத்துக் கணிப்பொன்று நடத்தப்பட்டது.
இக் கருத்துக் கணிப்பில் கடந்த ஆண்டில் முதலிடம் வகித்த பரீஸ், சுரிச் மற்றும் ஹொங்கொங் நகரங்கள் முன்னிலை வகிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் சற்றும் எதிர்பாராத வகையில் இஸ்ரேல் நாட்டிலுள்ள டெல் அவிவ் நகரம் முதலிடத்தைப் பிடித்துக்கொண்டதோடு பரீஸ் மற்றும் சிங்கப்பூர் நகரங்கள் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டன.
உலகில் அதிகரித்து வரும் பண வீக்கத்தால் போக்குவரத்துக்கான செலவு அதிகரித்துள்ளது மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருட்களின் விலை 3.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
இதற்கு கொரோனாத் தொற்றுப் பரவலும் அதற்கான பொது ஊரடங்கும் ஒரு காரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் போக்குவரத்து செலவு அதிகம் இதனால் பொருட்களின் விலையும் அதிகமாக உள்ளது . கடந்த முறை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் டெல் அவீவ் ஐந்தாவது இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
45 minute ago
02 Jul 2025