Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Nirosh / 2021 ஒக்டோபர் 24 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொலைக்காட்சி தொடர்களில் கட்டிப்பிடிக்கும் காட்சிகளை தடை செய்வதற்கு புதிய சட்டமொன்றை கொண்டுவருவதற்கு பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்துள்ளது.
பாகிஸ்தானின் இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை ஆணையம், கட்டிப்பிடிக்கும் காட்சிகளை தணிக்கை செய்யுமாறு அந்நாட்டு ஊடகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பாகிஸ்தான் தொலைக்காட்சி நாடகங்களில் இதுபோன்ற காட்சிகள் அதிகளவில் இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அநாகரிகமாக ஆடை அணிதல், படுக்கை காட்சிகள் மற்றும் சைகைகள், உணர்ச்சியை தூண்டும் காட்சிகள், சர்ச்சைக்குரிய இடங்கள் மற்றும் தேவையற்ற விவரங்கள், பார்வையாளர்களை மிகவும் தொந்தரவு செய்வது, பார்வையாளர்களை மன உளைச்சல் மற்றும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒழுக்கத்தின் தரத்திற்கு எதிராக இருப்பது போன்ற காட்சிகளாகும் எனவும் புதிய அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
திருமணமான தம்பதியர் காட்சிகள், திருமணத்திற்குப் புறம்பான உறவுகள், மோசமான ஆடை அணிதல், படுக்கை காட்சிகள் மற்றும் நெருக்கம் ஆகியவை காரணமாக இளைஞர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், பாகிஸ்தான் சமூகத்தின் கலாச்சாரம் பாதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
17 minute ago
1 hours ago