2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

பஸ் விபத்தில் 19 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2021 நவம்பர் 28 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்சிகோவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று  வேகக் கட்டுப் பாட்டை இழந்து குடியிருப்பொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 26 ஆம் திகதி சல்மா நகரில் உள்ள தேவாலயத்திற்கு சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனவும்,   32 பேர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாயைில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும், இதனால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X