2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

`ஆங் சான் சூகிக்கு` திடீர் உடல்நலக் குறைவு

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 15 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


மியான்மாரில் கடந்த பெப்ரவரி மாதம் ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவம், நாட்டின்
தலைவர் ஆங் சான் சூகியை”தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக
இறக்குமதி செய்து வைத்திருந்தமை, தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தை மீறியமை
உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்து சிறை வைத்தது. 

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
இதற்காக ஆங் சான் சூகி, தான் சிறை வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து காரில்
நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.இதன்போது அவர் மிகவும் சோர்வாகக் காணப்பட்டார் எனவும், தனக்கு உடல் நலம்
சரியில்லை எனத் தெரிவித்ததாகவும் இதனையடுத்து நீதிபதிகள் குறித்த வழக்கு
விசாரணையை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் மியன்மாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராகவும், நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கக்
கோரியும், சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க
வலியுறுத்தியும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி நீண்ட நாட்களாக
போராட்டங்கள் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X