Ilango Bharathy / 2021 டிசெம்பர் 03 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக போர் முடிவடைந்து 76 ஆண்டுகள் கடந்தும் தற்போதும் ஜேர்மனியில் வெடிக்காத வெடிகுண்டுகள் அவ்வப்போது கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஜேர்மனியில் உள்ள Donnersbergerbruecke என்ற ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் 2ஆம் உலகப் போரின்போது வீசப்பட்ட 250 கிலோ கிராம் எடை கொண்ட வான்வழி குண்டொன்று வெடித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் நிலையத்திற்கு வெளியே இடம்பெற்ற கட்டுமான பணியின்போதே இவ்வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும், இதில் நால்வர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5 hours ago
12 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
12 Dec 2025