2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

விநோத ஆசையால் நாயாக மாறிய நபர்

Ilango Bharathy   / 2022 மே 30 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
நபர் ஒருவர் நாயாக மாறிய  சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ஜப்பானைச் சேர்ந்த நபர் ஒருவர், தன்னை நீண்ட நாட்களாக ஒரு நாய் போல மாற்றி, உடை அணிந்து பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார்.
 
இதற்காக , திரைப்படங்களுக்கு ஆடைகள் உருவாக்கும் நிறுவனம் ஒன்றின் மூலம், 'Collie' என்ற நாய்  உருவில்  உடையொன்றைத்  தயாரித்துத் தருமாறும்   தான் மனிதன் என்பது தெரியாத அளவுக்கு அதனை உருவாக்க வேண்டும் என்றும் அந்த நபர்  கோரிக்கை விடுத்துள்ளார் இந்நிலையில் இதற்காக, அந்த நிறுவனம் சுமார் 40 நாட்களை எடுத்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இவ் உடைக்காக 2 மில்லியன் யென் ( இலங்கை மதிப்பில் சுமார் 55 லட்சம் ரூபாயை அவர் செலவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில்  வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .