2023 ஜூன் 07, புதன்கிழமை

சே குவேராவின் மகள் இந்தியாவில்

Editorial   / 2019 ஜூலை 30 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக புரட்சியாளர்கள் பட்டியலிலும், கியூபா புரட்சியிலும் முக்கியமானவரான சே குவேராவின் மகள் அலெய்டா குவேரா இந்தியா வந்துள்ளார்.

கியூபா நாட்டிலிருந்து டெல்லி வந்தடைந்த அவர், நேற்று முன்தினம் கேரளா வந்தார். அத்துடன், நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்பின் போது பல மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களையும் அவர் சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து அவர் நாளை மறுநாள் கண்ணூரில் மகளிர் குழு ஏற்பாடு செய்துள்ள புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறார். 

பின்னர் 2ஆம் திகதி எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலியில், கேரள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் நடத்தும் மாநாட்டிலும் அவர் கலந்துகொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சே குவேரா இந்தியா வந்த 60 ஆண்டுகளை கொண்டாடும் விதமாக அவர் தற்போது இந்தியா வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .