2021 ஜூலை 27, செவ்வாய்க்கிழமை

மீண்டும் போட்டியிடுவேன்: பராக் ஒபாமா

Super User   / 2011 ஏப்ரல் 04 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அடுத்த வருடம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இன்று அறிவித்துள்ளார்.

ஒபாமாவின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலமும் அவர் ஆதரவாளர்களுக்கு தனது திட்டத்தை அறிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு மாற்றத்தை ஏற்படுத்துவதாக தான் அளித்த உறுதியை நிறைவேற்றியதாக அவரின் பிரசாரம் இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இத்தடவை அவரின் தேர்தல் பிரசாரத்திற்கு சுமார் 100 கோடி டொலர்களை அவரின் பிரசாரக்குழு எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு தேர்தலில் ஒபாமாவின் பிரசாரத்திற்காக 75 கோடி டொலர் திரட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0

 • xlntgson Tuesday, 05 April 2011 09:28 PM

  ஈரானைத் தாக்கத்தயங்க மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்?
  போர் வெற்றியினால் தான் புஷ் 2 ஆம் முறை தேர்ந்தெடுக்கப்பட்டார் எனலாம்.
  அமெ. மக்கள் இப்போதாவது அறிந்து கொள்ளவேண்டும். அவர்களது தலைவர்களது யுத்த வெறியைப்பற்றி
  போருக்கு முஸ்தீபு செய்யும் தலைவர்களை தூக்கியெறிய வேண்டும்.
  இராக்குக்கு குண்டு வீசி பெரும்பொருள் திரட்டியும் ஈட்டிய பொருள்போதாமல் இப்போது ஆப்ரிக்காவுக்கு போவதன் தேவை என்ன?
  வட கொரியாவுக்கும் சீனாவுக்கும் இவர்களது பருப்பு சரி வராது என்பதால் தானே, ஆண்மையுள்ளவர்கள் என்றால் பலம் உள்ளவர்களோடு மோத வேண்டும்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .