Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 பெப்ரவரி 08 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் நபர் ஒருவர் தனது 6 வயதான மகனுக்கு தனது தொலைபேசியை விளையாடுவதற்காகக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த சிறுவன் தவறுதலாக அத்தொலைபேசியில் உள்ள உணவு டெலிவரி செயலியைத் திறந்து, பல உணவகங்களில் இருந்து 1000 டொலர்களுக்கு (இலங்கை மதிப்பில் 3,66,101 ரூபாய் ) உணவுகளை ஓர்டர் செய்துள்ளான்.
இதனையடுத்து சிறிது நேரத்தில் அவரது வீட்டின் முன்பாக உணவினை டெலிவரி செய்ய பலர் குவிந்துள்ளபோதே அவரது மகன் இவ்வாறு செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் அவர் இச்சம்பவம் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதோடு, குழந்தைகளிடம் தொலைபேசியை கொடுக்கும் போது பெற்றோர் கவனமாக இருக்கவேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .