Ilango Bharathy / 2022 நவம்பர் 27 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
காற்பந்து ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் FIFA உலகக்கோப்பைத் தொடரானது கடந்த 20 ஆம் திகதி கட்டாரில் கோலாகலமாக ஆரம்பமானது.
டிசெம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இத்தொடரில் உலகம் முழுவதிலும் இருந்து 32 நாடுகளின் அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்நிலையில் ‘உலகக்கோப்பைக் காற்பந்துப் போட்டிகளை காண 50 GB டேட்டா இலவசம்‘ என்ற லிங்க் (link ) ஒன்று அண்மைக்காலமாக சமூகவலைதளங்களில் உலா வந்தவண்ணம் உள்ளது.

மேலும் ”இவ் லிங்கை பலருக்குப் பகிர்ந்தால் உங்களுக்கு 50 ஜிபி டேட்டா (data) இலவசமாகக் கிடைக்கும்” என அதில் குறிப்பிடப்பட்டிருப்பதால் பலரும் அதனை நம்பி அச்செய்தியை வெகுவாகப் பரப்பி வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த லிங்கை திறக்கவோ, அல்லது அதனைப் பகிரவோ வேண்டாம் எனவும் ,அவ்வாறு செய்தால் உங்களது தொலைபேசி ஹேக் செய்யப்பட வாய்ப்பு உள்ளது எனவும் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026