2022 ஜனவரி 17, திங்கட்கிழமை

இந்தவார பலன்கள் (04.08.2013 - 10.08.2013)

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}இந்தவார பலன்கள் (04.08.2013 - 10.08.2013)
 
மேடம்
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
ஆர்வமுடன் செயல்பட்டு வெற்றி பெறும் மேட ராசி அன்பா்களே..!
 
இந்தவாரம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெரியவர்களின் சொல்லுக்கு மரியாதை கொடுப்பது நன்மை தரும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். இல்லத்தில் புதிய கௌரவமான நிலை உண்டாகும். பிறருடைய யோசனைகள் நல்ல பலன்களைக் கொடுக்கும். சகோதர வழியில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பணியிடத்தில் சின்ன சின்ன எதிர்ப்புக்கள் இருக்கும். வழக்குகளில் இருந்த தேக்க நிலை மாறும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். பெண்கள் வழியில் உள்ள உறவினர்களிடையே மதிப்பு கூடும்.
 
அதிர்ஷ்ட திகதி : 04
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)
 
 
 
இடபம்
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
சாதுர்யமாக செயல்பட்டு சாதனை படைக்கும் இடப ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் தொடக்கத்தில் பொது நலத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தேவையற்ற மனபயம் நீங்கும். வியாபாரிகளின் கடன் யாவும் வசூலாகும். நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுப்பார்கள். பணியில் அனுபவம் மிக்க வேலையாட்கள் கிடைப்பார்கள். எங்கு சென்றாலும் உங்களுடைய மதிப்பு, மரியாதை கூடும். பெண்களுக்கு தடைப்பட்ட காரியங்கள் முடிவுக்கு வரும். இருந்த போதிலும் வார கடைசியில் பணியிடத்தில் சின்ன சின்ன அவமானங்கள் ஏற்படக்கூடும். யாரைப்பற்றியும் யாரிடமும் விசாரிக்க வேண்டாம். சில கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். யோகா, தியானப் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது.
 
அதிர்ஷ்ட திகதி : 8
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்
 
 
 
மிதுனம்
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
வாழ்வில் திட்டமிட்டு செயலாற்றும் மிதுனம் ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் பணியில் புதிய பொறுப்புக்களை ஏற்பீர்கள். இல்லத்தில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஒரு நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். முன் கோபத்தைக் குறையுங்கள். மின்சாரம், நெருப்பு இவற்றை கவனமாக கையாளுங்கள். நண்பர்களை நம்பி புதிய முடிவுகளை எடுக்க வேண்டாம். மன அமைதிக்கு இடையூறு ஏற்படும் நிகழ்வுகள் நடக்கலாம். உடல் ஆரோக்கியம் திருப்தி தராது. வண்டி, வாகனம் பயணம் ஆகியவற்றில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆண் பிள்ளைகளிடம் அலட்சியப்போக்கு காணப்படும். பழைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதிய வழிகள் பிறக்கும்.
 
அதிர்ஷ்ட திகதி : 9
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி
 
 
 
கடகம்
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.
 
பிறருக்கு உதவும் மனம் கொண்ட கடக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் குழந்தைகளிடம் நல்ல முன்னேற்றம் காண முடியும். கடிதங்கள் சுபசெய்தியை கொண்டு வந்து சேர்க்கும். உறவினர்கள் சந்தித்து மகிழும் வாய்ப்பு கிட்டும். மாணவர்கள் நற்பெயரைப் பெறுவீர்கள். வரவிற்கேற்ற செலவுகள் காணப்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். உடல் நிலையில் அக்கறை செலுத்துங்கள். பண விடயத்தில் ஏமாற்றங்கள் உண்டாகும். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். இல்லத்தில் மருத்துவ செலவுகள் வந்து போகும். விற்பனையும் லாபமும் சரியும். கொடுக்கல் - வாங்கலில் பிரச்சினைகள் உண்டாகும். இந்தவாரம் உங்களுக்கு சுமாராகவே அமையும்.
 
அதிர்ஷ்ட திகதி : 8
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்
 
 
 
சிம்மம்
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
எண்ணத்திலும் செயலிலும் உறுதி நிறைந்த சிம்ம ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் பயணங்களில் எச்சரிக்கை தேவை. பணியாளர்களுக்கு பணியிடத்தில் அதிக மதிப்பு கூடும். மனதில் போட்ட திட்டம் எளிதாக நிறைவேறிவிடும். ஒற்றுமைக்கு குறைவு வராது. வரவிற்கு ஏற்ற செலவுகள் உண்டு. குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மனதில் தைரியத்துடன் எதையும் செய்வீர்கள். பதவியில் அதிகாரத்தில் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும். பொருட்களை வாங்குவது விற்பதில் கவனமாக செயல்பட வேண்டி வரும். கிடைத்த வேலைகளை செய்வது நல்லது. படிப்பில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இழந்த சலுகைகள், தகுதி ஆகியவைகளை மீண்டும் பெறுவீர்கள். சில தவறான நண்பர்களை அடையாளம் காணுவீர்கள்.
 
அதிர்ஷ்ட திகதி : 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
 
 
கன்னி
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
வயதில் குறைந்தவருக்கும் மரியாதை தருகிற கன்னி ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். மற்றவர்களின் உதவியால் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்பச் செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள். மறைமுகப் போட்டிகளை சமாளிக்க மாற்றினத்தவர்கள் கைகொடுத்து உதவுவார்கள். சில பெரிய பொறுப்புக்கள் தேடி வரும். மற்றவர்களுடைய கருத்துக்களை கேட்டு தொழிலில் சில மாற்றங்களை செய்வீர்கள். சிலர் உங்கள் மீது வீண் பழி சுமத்த முயல்வார்கள். அதனால் ஒருவித படபடப்பு, தாழ்வு மனப்பான்மை காணப்படும். தன்னம்பிக்கை குறையும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வழக்கில் சாதகமான முடிவுகள் காணப்படும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. சுமாரான வாரம் இது.
 
அதிர்ஷ்ட திகதி : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்
 
 
 
துலாம்
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதங்கள்.
 
பெரியவர்களை மதிப்புடன் நடத்தும் துலா ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்து சேரும் நாள். மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடைபெறலாம். வீடு, இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி தரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். கடினமான காரியத்தையும் எளிதாக முடிப்பீர்கள். சுபநிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். பெண்களின் நீண்ட நாள் கனவுகள் நினைவாகும். உடலில் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கப் பெறுவீர்கள். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். அனாவசியப் பேச்சைக் குறையுங்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை உணர்வீர்கள். தந்தையாரின் ஒத்துழைப்பு அதகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் நீங்கும்.
 
அதிர்ஷ்ட திகதி : 10
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்
 
 
 
விருட்சிகம்
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.
 
தன்னம்பிக்கையுடன் செயல்படும் விருட்சிக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் பெற்றோர்களின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பு கொடுப்பார்கள். புத்திசாலித்தனமான செயல்களால் புகழ் அதிகரிக்கும். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். உங்களிடம் ஒருவிதமான தெளிவு காணப்படும். எதிர்மறையான எண்ணங்கள் விலகும். தன்னிச்சையாக சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். சகோதர வழியில் ஆரோக்கியமான விவாதங்கள் வரக்கூடும். சிக்கனமாக இருக்க வேண்டும் என நினைத்தாலும் செலவுகள் அதிகரிக்கும். மகிழ்ச்சியான வாரம் இது.
 
அதிர்ஷ்ட திகதி : 8
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்
 
 
 
தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
அனைவரிடமும் பாசமுடன் நடக்கும் தனுசு ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் வரவும் செலவும் சமமாகும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். எந்த பிரச்சினையையும் சமாளிக்கும் பக்குவம் உங்களிடத்தில் காணப்படும். பெற்றோர்களின் ஆதரவு பெறுகும். கடினமான சில வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். மூத்தவர்கள் சில நுணுக்கங்களைக் கற்றுத் தருவார்கள். சில மறைமுகமான எதிர்ப்புக்கள் விலகும். திருமணம், சீமந்தம் போன்ற நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். நாடாளுபவர்களின் அன்பு கிடைக்கப் பெறுவீர்கள். எப்படி நடக்குமோ என்ற காரியம் ஒன்று நல்லபடியாக நடக்கலாம். புது பதவிகளும் பொறுப்புக்களும் கூடி வரும்.
 
அதிர்ஷ்ட திகதி : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்
 
சந்திராஷ்டமம்:
ஓகஸ்ட் 5ஆம் திகதி காலை 10.19 மணியிலிருந்து ஓகஸ்ட் 08ஆம் திகதி மாலை 09.38 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
 
குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.
 
 
 
மகரம்
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
பிறருக்கு உதவும் மனம் கொண்ட மகர ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி தரும். வழக்குகளில் வெற்றி கிட்டும். மற்றவர்களுக்கான செலவுகளை தாங்களே முன் நின்று செய்வீர்கள். திடீர் திருப்பங்கள் உண்டாகும். மனக் குழப்பங்கள் அகன்று மகிழ்ச்சி கூடும் நாள். மறதியால் விட்டுப்போன காரியம் ஒன்றை மீண்டும் செய்து முடிக்கும் எண்ணம் மேலோங்கும். பெண்கள் எதையும் தன்னம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடமாற்றங்கள் உண்டு. குடும்பத்தில் உங்களுடைய செல்வாக்கு உயரும் நாள். உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைப்பீர்கள். நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
 
அதிர்ஷ்ட திகதி : 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
சந்திராஷ்டமம்:
ஓகஸ்ட் 8ஆம் திகதி மாலை 09.38 மணியிலிருந்து ஓகஸ்ட் 10ஆம் திகதி காலை 07.13 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
 
குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.
 
 
 
கும்பம்
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் கும்ப ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் வீட்டில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வதால் விருப்பங்கள் நிறைவேறும். வரவை விட செலவு கூடினாலும் சேமிப்பில் ஒன்றும் குறையாது. அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் வந்து அலைமோதும். புதிய வாடிக்கையாளர்கள் உங்களை தேடி வருவார்கள். சில முக்கியமான பொருட்கள் உங்களிடம் வந்து சேரும். குடும்பத்தில் உங்களுடைய மதிப்பு உயரும். சகோதர, சகோதரிகளால் பயனடைவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்கும். புகழ், கௌரவம் உயரும் நாள். வார இறுதியில் யாரையும் நம்பி உறுதி மொழி தர வேண்டாம். உயர் கல்வி சம்மந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும்.
 
அதிர்ஷ்ட திகதி : 07
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)
 
சந்திராஷ்டமம்:
ஓகஸ்ட் 10ஆம் திகதி காலை 07.13 மணியிலிருந்து ஓகஸ்ட் 12ஆம் திகதி மாலை 02.48 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
 
குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.
 
 
 
மீனம்
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9- பாதங்கள்.
 
வெளிப்படையாக பேசத் தயங்கும் மீன ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் உங்களுடைய பணி சுமை அதிகரித்துக் கொண்டே இருக்கும். மற்றவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. மறைமுகமான எதிரிகளை சந்திக்க நேரிடும். உங்களுடைய படைப்புக்களுக்கு மற்றொருவர் உரிமை கொள்வார்கள். வீண் பழிகள் மற்றும் அவச்சொற்கள் உண்டாகும். அடுக்கடுக்காக செலவுகள் வந்து கொண்டே இருக்கும். மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் அதிகரிக்கும். உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். இருந்த போதிலும் வாழ்க்கைத் துணை வழியே வரவு வந்து சேரலாம். மற்றவர்களின் விமர்சனங்களை பொருட்படுத்த மாட்டீர்கள். உற்சாகத்தோடு செயல்படும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள்.
 
அதிர்ஷ்ட திகதி : 10
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .