2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

இந்தவார பலன்கள் (05.10.2014 – 11.10.2014)

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 04 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}இந்தவார பலன்கள் (05.10.2014 – 11.10.2014)
 
மேடம்
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
ஆர்வமுடன் செயல்பட்டு வெற்றி பெறும் மேட ராசி அன்பா்களே..!
 
இந்த வாரம்  பிறருடைய தவறுக்கு நீங்க பழி ஏற்க வேண்டி இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் இருப்பது அவசியம். வண்டி வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அதற்கென்று ஒரு தொகையை செலவு செய்ய வேண்டி இருக்கும். தொழில் வழியில் சற்று மனக்குழப்பங்கள் மிகுந்து காணப்படும். அனைவரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. வார இறுதியில் புதிய தொடர்புகளால் ஆதாயம் கூடும். மாணவர்களுக்கு திறமைக்குரிய உயர்வு தேடி வரும். உறவினர்களின் இல்லத்து நிகழ்வுகளில் பங்கு கொள்வீர்கள். தளர்வடைந்த செயல்களுக்குத் தக்க நபர்களின் உதவியை நாடுவீர்கள். பணிகளில் உங்களுடைய ஒத்துழைப்பு சிறப்புடையதாக இருக்கும். வார இறுதி உங்களுக்கு மகிழ்ச்சியுடையதாகவே அமையும்.   
 
அதிர்ஷ்ட திகதி : 06
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
 
 
இடபம் 
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
சாதுர்யமாக செயல்பட்டு சாதனை படைக்கும் இடப ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் பிள்ளைகளின் செயல்கள் உங்களுக்கு பெருமையை தேடித்தரும். எந்த ஒரு சிறு விஷயத்தையும் அலட்சியபடுத்தாமல் இருப்பது நல்லது.  உயர்ந்த மனிதர்களின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். புதிய வாய்ப்புக்களின் மூலம் மனதில் உற்சாகம் பிறக்கும்.திருமண நிகழ்ச்சிகள் மகிழ்ச்சிகரமாக முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.. பொழுது போக்கில் அதிக நாட்டம்  கொள்வீர். நீண்ட நாள் செய்ய விரும்பிய காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள்.  வார்த்தைகளில் இனிமை அவசியம். மருத்துவ சோதனைகள் செய்வது நலம். தொழில் சற்று மந்த நிலை காணப்பட்டாலும் தங்களின் முயற்சியினால் வியாபாரம் பெருக காண்பீர்கள். இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியுடையதாகவே இருக்கும். 
 
அதிர்ஷ்ட திகதி : 09
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல் 
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்) 
 
 
 
மிதுனம்
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
வாழ்வில் திட்டமிட்டு செயலாற்றும் மிதுனம் ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் அதிக வேலைகளால் பெண்களுக்கு ஆரோக்கிய குறைவுகள் ஏற்படலாம். இன்று வழக்கத்தை விட வேலைப்பளு கூடும். குடும்பத்தில் காரணமற்ற  வகையில் கோபதாபங்களை வெளிப்படுத்துவீர்கள்.  உடலில் அசதி சோர்வு ஆட்கொள்ளும். செலவுகளைக் குறைக்க நினைத்தாலும் செலவுகள் ஏதாவது ஒரு வழியில் தலை தூக்கும். சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் தவிப்பீர்கள். அதிக பொறுப்புக்களால் தொல்லை பட நேரிடலாம்.  மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும்  அவசியம். யாரோடும் வீண் வாக்கு வாதம் வேண்டாம். செய்யும் தொழிலில் அக்கறையோடு செயல்படுவது அவசியம். புதியவர்களிடம் ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது உங்களுக்கு இந்த வாரம் சுமாராகவே அமையும். 
 
அதிர்ஷ்ட திகதி : 09 
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி
 
 
 
கடகம் 
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.
 
பிறருக்கு உதவும் மனம் கொண்ட கடக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் புதிய பொருட்களை வாங்குவதற்கு திட்டம் தீட்டுவீர்கள். இடம் மாற்றம் மூலம் மனது மகிழ்ச்சியடையும்.  பணியில் சிரமம் இருந்தாலும் அதை வெளிக்காட்ட மாட்டீர்கள்.  புதிய அறிமுகங்கள் பயனுள்ளதாக இருக்கும். வரவேண்டிய கடன் தொகை கிடைக்கப்பெறுவீர்கள். செயல்களில் அதிக முனைப்போடு செயல்பட்டு முன்னேற்றம் அடைவீர்கள்.  பணவரவுகள் திருப்தி தரும். வாகனப்பயணங்களில் வேகம் தவிர்க்கவும். குடும்பத்தின் எதிர்காலத்தை மனதில் கொண்டு புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். சில முக்கியமான பணிகளுக்காக உங்களுடைய சேமிப்புக்கள் குறையும்.  வெளியூர் பிரயாணங்களினால் சில புதிய பணி வாய்ப்புக்கள் உண்டாகலாம். மாணவர்கள் அமைதியை கடைபிடிப்பது நல்லது. கஷ்டங்கள் படிப்படியாக விலகும்.இந்த வாரம் மத்திம பலனுடன்  செல்லும். 
 
அதிர்ஷ்ட திகதி : 10
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல் 
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்) 
 
 
 
சிம்மம்
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
எண்ணத்திலும் செயலிலும் உறுதி நிறைந்த சிம்ம ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் புதிய திட்டங்கள் அனைத்தும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். எண்ணங்கள் அனைத்தும் படிப்படியாக நிறைவேறும். பணிசுமையில் இருந்து சிறிது விடுபடுவீர்கள். தொழில்மாற்றம் பற்றிய  சிந்தனைகள் கூடுதலாக இருக்கும். சுகமான, சந்தோஷமான அனுபவங்களைச் சந்திக்கும் நாள். பெற்றோரின் கருத்துக்கள் யோசிக்க வைக்கும். எச்சரிக்கையாக செயல்பட்டால் ஏற்றம் பெறலாம். மூன்றாம் நபர் விடயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும். வாகன பயணத்தில் கவனம் தேவை. பெற்றோர் உடல் நலனில் அக்கறை காட்டுவது அவசியம். உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்கவும். முதன் முறையாக வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் உண்டாகலாம். இந்த வாரம் உங்களுக்கு இரண்டும் கலந்த வாய்ப்புக்களே தென்படுகின்றன. 
 
அதிர்ஷ்ட திகதி : 10
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)
 
 
 
கன்னி 
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
வயதில் குறைந்தவருக்கும் மரியாதை தருகிற கன்னி ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் தொடக்கத்தில் பிறருடைய கட்டாயத்திற்காக புதிதாக எதையும் செய்ய வேண்டாம். பணியாளர்கள் யாரையும் பகைக்காமல் இருப்பது நல்லது. விஷப்பூச்சிக்கடிகளில் அலட்சியம் கூடாது. நெருங்கிய நண்பர் கேட்ட பண உதவி ஒன்றை செய்து முடிப்பீர்கள். குடும்பத்துடன் தெய்வ ஸ்தல வழிபாடு அமையும்.  இல்லறத் துணையின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள்.கணக்கு வழக்குகளில் கவனம் தேவை.  ஆடம்பரமும் அநாவசிய கேளிக்கைகளும் பணத்தை விரையமாக்கும். வெளிநாடு பயணத்திற்காக அலைச்சல் பட வேண்டி இருக்கும். அனாவசியமாக மற்றவர்களது பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபார விஷயங்களில் மிகவும் கவனம் தேவை. இந்த வாரம் உங்களுக்கு சுமாராகவே செல்லும்.  
 
அதிர்ஷ்ட திகதி : 06
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி
 
 
 
துலாம்
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதங்கள்.
 
பெரியவர்களை மதிப்புடன் நடத்தும் துலா ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் பணியிடத்தில் சில மன வேதனைகள் உண்டாகும். கடினமாக உழைத்தால் மட்டுமே பலனை எதிர்பபார்க்க முடியும். எதையும் யோசித்து நிதானமாக செயல்பட வேண்டும். பேச்சில் மென்மை இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உறவினர் ஒருவரின் வருகை குடும்ப சூழலை மாற்றி அமைக்கும். சோம்பல்கள் அதிக அளவில் காணப்படும். தங்களுடைய உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது அவசியம். குழந்தைகளிடத்தில் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. ஆனாலும் வார இறுதியில் புதிய தொழில் அமைப்புகள் கைகூடி வரும். வரவுகள் அதிகரித்தாலும் சுப செலவுகள் கூடவே வரும். குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா செல்ல வாய்ப்புகள் உண்டாகும். வார தொடகத்தில் சில சங்கடங்கள் காணப்பட்டாலும் இறுதியில் மகிழ்ச்சியாகவே அமையும். 
 
அதிர்ஷ்ட திகதி : 09
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி
 
 
 
விருட்சிகம்
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.
 
தன்னம்பிக்கையுடன் செயல்படும் விருட்சிக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். திட்டமிட்டபடி செயல்பட்டால் வருமானத்தை அதிகரிக்கலாம்  குடும்பத்தில் அன்பு மேலோங்கும். சுகமான சந்தோஷமான அனுபவங்களை சந்திக்கும் நாள் . ஆடம்பர பொருட்கள் மீது அதிக நாட்டம் உண்டாகும்.தொழில் போட்டிகளுக்கு தீர்வு காண்பீர்கள். அரசியல் துறையினருக்கு ஆதரவும் ஆதாயமும் கிட்டும். சுப காரியதடைகள் படிப்படியாக விலகும். திட்டமிட்டு செய்யக்கூடிய முயற்ச்சிகள் வெற்றியைத் தரும்.  பெரியவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்தால் மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு உற்சாகம் காணப்படும். எந்த ஒரு பிரச்சனைக்கும் முன்னிற்பதைத் தவிர்க்கவும்.  ஒரு சில விஷயங்களில் அலைச்சல்கள் காணப்படும்.  இந்த வாரம் உங்களுக்கு மிக மகிழ்ச்சியாகவே அமையும்.
 
அதிர்ஷ்ட திகதி : 07
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர 
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா
 
 
 
தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
அனைவரிடமும் பாசமுடன் நடக்கும் தனுசு ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் சில புதிய தொடர்புகளினால் மகிழ்ச்சி உண்டாகும்.  வியாபார முன்னேற்றம் காணப்படும்.  திடீர் லாபங்கள் மூலம் மனம் மகிழ்ச்சியடையும்.  முயற்ச்சி செய்த காரியங்களுக்கு நல்ல வெற்றிகள் கிடைக்கும். உடலில் இவ்வளவு நாட்கள் இருந்து வந்த பாதிப்புகள் குறையும். சிறுகடன் தொந்தரவு கொடுக்கும். பெற்றோரின் கருத்துக்கள் யோசிக்க வைக்கும். விரும்பிய பணவரவு ஒன்றுக்கும் வாய்ப்புகள் உண்டாகும்.  வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது கவனம் அவசியம். குழப்பங்களைத் தவிர்க்க விட்டுக்கொடுத்து போவது அவசியம். புதிய தொழில்களில் அதிக முதலீடுகள் கூடாது.ஆன்மீகத்தில் நீண்ட நாளைய ஆசையை நிறைவேற்றுவீர்கள். குடும்ப பெண்களுக்கு புதிய தொடர்புகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். தொலைதூரபயணங்கள் சாதகமாக அமையும்.  இந்த வாரம் இரண்டும் கலந்த பலன்களே காணப்படுகின்றன.  
 
அதிர்ஷ்ட திகதி : 10
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல் 
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்) 
 
 
 
மகரம் 
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
பிறருக்கு உதவும் மனம் கொண்ட மகர ராசி அன்பர்களே..!
 
இந்த வாரம் உணவு  விஷயத்தில் கவனம் தேவை. தேவையில்லாத மருத்துவ செலவுகள் காணப்படும்.  எந்த ஒரு விஷயத்தையும் மிக சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். தெய்வ வழிபாடு மன நிறைவு தரும். சுப காரிய விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த பணவரவுகளின் மூலம் தங்களது திட்டங்களை நிறைவேற்ற ஏதுவாக இருக்கும்.  சொத்து விஷயங்களில் இருந்த இழுபறி நிலைகள் மாறும். தொல்லை கொடுத்து வந்த கடன்கள் முடிவுக்கு வரும். தொழிலில் அமைதியும் கவனமும் அவசியம். புதிய தொழில் அமைப்புகள் கைகூடும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதவி உயர்வு  இடமாற்றம் ஆகியவை கிடைக்கப்பெறுவீர்கள்.;. பிற இன மக்கள் தங்களுக்க உதவுவார்கள். 
 
அதிர்ஷ்ட திகதி : 05
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல் 
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்) 
 
 
 
கும்பம்
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் கும்ப ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் ஆடம்பரங்களைத் தவிர்ப்பது அவசியம். வாகனங்களில் செல்வதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் செல்வாக்குள்ள பொறுப்புகள் கூடி வரும். உடன் பிறந்தவர்களுக்கு பண உதவி செய்து சமயத்துக்கு உதவியாக இருப்பீர்கள். வியாபாரம்  விருத்தியடையும். இல்லத்து பெரியவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். குல தெய்வ வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள். இடமாற்றங்கள் நல்ல மனமாற்றத்தைக் கொடுக்கும். விருந்துகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புக்கள் உண்டாகும். வார இறுதியில்  குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். வேலையாட்களிடம் மென்மையான போக்கை கடைபிடித்தால் அவர்களின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கப்பெறுவீர்கள். பணியில் இருப்பவர்களுக்கு புது பொறுப்புகளும் மாற்றங்களும் ஏற்படும். 
 
அதிர்ஷ்ட திகதி : 06
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
 
 
மீனம் 
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9- பாதங்கள்.
 
வெளிப்படையாக பேசத் தயங்கும் மீன ராசி அன்பர்களே..!   
 
இந்தவாரம் எதிர்கால நலன் குறித்து செயல்களில் அக்கறை கொள்வீர்கள். உடல் மற்றும் மனநிலையில் புத்துணர்ச்சி உண்டாகும். சுப நிகழ்ச்சியில் இருந்து வந்த தடைகள் நீங்கும். வாகன ஆசைகள் நிறைவேறும்.  நெருங்கிய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியைக்  கொடுக்கும். பணியிடத்தில் பணியாளர்களின் ஆதரவுகள் கிடைக்கப்பெறுவீர்கள். பொது வாழ்வில் உள்ளவர்கள் மக்களிடம் நற்பெயர் பெறுவீர்கள். கூட்டுத் தொழில் சீராக செல்லும். முயற்ச்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும். வியாபாரத்தில் பண லாபங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பாராத வங்கிக் கடன்கள் கிடைக்கப்பெறுவீர்கள். இந்த வாரம் மகிழ்ச்சியாகவே செல்லும். 
 
அதிர்ஷ்ட திகதி : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம் : குருபகவான்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .