2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

இந்தவார பலன்கள் (28.09.2014 - 04.10.2014)

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}இந்தவார பலன்கள் (28.09.2014 - 04.10.2014)
 
மேடம்
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
தன்னை சார்ந்தவர்களுடன். ஒழிவு மறைவின்றி பழகும் வெண்மையான உள்ளம் கொண்ட மேட ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் உங்கள் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். இதனால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும் தொழில் சம்மந்தமாக வெளியூர் செல்லும் சூழ்நிலைகள் உருவாகலாம். தேவைக்கேற்ப பணவரவு உண்டாகும். வார இறுதியில் குடும்பத்தார் இடையே கருத்து வேறுபாடு உண்டாகும். மற்றும் பண விடயத்தில் கவனத்துடன் இருக்கவும். உடலில் சிறு சிறு நோய் பாதிப்புக்கள் உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும். மன நிம்மதி குறையும். எதிர்பார்புகள் தடையின்றி நிறைவேறும்.
 
அதிர்ஷ்ட திகதி : 28
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம் நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்
 
 
 
இடபம் 
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் வாழ்வில் வெற்றியை பெற்றுக் கொள்ளும் இடப ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் உங்களுக்கு உறவினர்களிடையே அன்யோன்யம் கூடும், மகிழ்ச்சி உண்டாகும். செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியைத் தழுவும். வார இறுதியில் அனாவசிய பேச்சுக்களால் பிரச்சினைகள் மற்றும் வீண் அலைச்சல் உண்டாகும். பிறருடைய உதவியை எதிர்பார்த்து கிடைக்காமல் போகலாம். இதனால் வீண் மனஸ்தாபங்கள் காணப்படும். எனவே உடல் ஆரோக்கியம் சம்மந்தமான விஷயத்தில் கவனத்துடன் இருப்பது அவசியமாகும். பெண்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரிகள் இடையே பிரச்சினைகள் அதிகரிக்கும்.
 
அதிர்ஷ்ட திகதி : 30
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்
 
 
 
மிதுனம்
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
வலிமையான உள்ளமும் செயல்களில் சுறுசுறுப்பும் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் உங்களுக்கு அரசாங்க காரியங்கள் அனைத்தும் அனுகூலமாக முடியும். பல புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். இசையில் ஆர்வம் காணப்படும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் அதிகரிக்கம், அதனால் மகிழ்ச்சி ஏற்படும். இருந்தாலும் அதிக அளவில் போட்டிகளும் காணப்படும். வார இறுதியில் கொடுக்கல் - வாங்களில் சிக்கல் தோன்றும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும். இல்லையெனில் பெரிய அளவில் நஷ்டங்களை சந்திக்க நேரிடும். மனதில் குழப்பங்கள் தோன்றி மறையும்.
அதிர்ஷ்ட திகதி : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
 
 
கடகம் 
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.
 
மென்மையான சுபாவமும் எல்லோருடனும் எளிமையாக பழகும் உள்ளமும் கொண்ட கடக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் குடும்பத்தில் பெண்களிடமிருந்து உதவிகள் கிடைக்கும். தொட்டது துலங்கும் காலம் இது. எனவே முயற்சி செயதால் காரியங்கள் அனைத்திலும் வெற்றியடையலாம். செய்யும் தொழிலில் மிகுந்த ஈடுபாட்டுடன் காணப்படுவீர்கள். இசையில் ஆர்வம் செலுத்தி உடல் மற்றும் மனதை  அமைதியுடன் வைத்து இருப்பீர்கள். வெளியூர் செல்லும் சூழ்நிலை உருவாகலாம். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். இதனால் அதிக அளவில் லாபம் காணப்படும்.
 
அதிர்ஷ்ட திகதி : 30
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி 
 
 
 
சிம்மம்
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
யாருக்காகவும் தனது கொள்கைகளை விட்டுக்கொடுக்காது பயமற்ற பேச்சும் செயலும் கொண்ட  சிம்ம ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் பெண்களுடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும். துன்பங்கள் நிகழ வாய்ப்புக்கள் உள்ளன. மனம் சஞ்சலம் அடையும். ஒரு சில காரியங்களில் அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.  அலைச்சல்கள் உண்டாகும். அயலாருடைய உதவியை எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாகும். மேலதிகாரிகள் மற்றும் பகைவர்களுடன் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். வேண்டாத உணவுகளால் வயிற்றில் பிரச்சினைகள் ஏற்படும். மருத்துவ செலவுகள் உண்டாகும். எனவே உணவு விடயத்தில் கவனம் அவசியம்.
 
அதிர்ஷ்ட திகதி : 30 
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)
 
 
 
கன்னி 
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
தான் செய்யும் எந்த காரியத்திலும் வாய்மையும் முன்னுரிமையும் பெற எண்ணும் கன்னி ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் இசையில் ஆர்வம் அதிகரிக்கும் அதனால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். புண்ணிய செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். தொழில் புதிய வழிமுறைகளை கையாண்டு வெற்றி காண்பீர்கள். இதனால் தனலாபங்கள் கிடைக்கும். மேலதிகாரிகளுடைய பாராட்டுக்களைப் பெறுவீர்கள். காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். வார இறுதியில் சிலவிதமான சிக்கல்கள் தோன்றும். எனவே நண்பர்கள் விஷயத்தில் கவனத்துடன் இருப்பது அவசியம். 
 
அதிர்ஷ்ட திகதி : 30
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர 
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா
 
 
 
துலாம்
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதங்கள். 
 
தேடி சென்று உதவிடும் குணமும் முடிவுகளை பாராது முன்னேற்றத்திற்காக முழு மூச்சாக செயல்படும் துலா ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் தொழில் நிமிர்த்தமாக பிரயாணம் செல்லுதல். இதனால் லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். ஏதிர்பார்புகள் தடையின்றி நிறை வேறும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் அதிகரிக்கும். பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதிய சொத்துக்கள் சேரும், தொழிலில் பல புதிய வழி முறைகளை கையாண்டு வெற்றி பெருவீர்கள். பொன், பொருள் ஆகியவை சேர்க்கை நடைபெறும். இல்லத்தில் உறவினர்களின் வருகை காணப்படும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
 
அதிர்ஷ்ட திகதி : 4
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)
 
 
 
விருட்சிகம்
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள். 
 
ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடையவர்களே எடுத்த காரியத்தை முடிக்ககூடிய ஆற்றல் பெற்ற விருட்சிக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் மனதில் உற்சாகம் பிறக்கும் நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி வகைகள் கிடைக்கும். பிறருடைய உதவியை எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாகும். இதனால் மனக்கசப்புகள் மற்றும் அலைச்சல்கள் காணப்படும். இருந்தாலும் மனதை தளர விடாதீர்கள். செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியை அடையும். வேலையில் உயர்பதவியில் உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வேண்டாத பேச்சுகளால் வியாபாரத்தில் நஷ்டம் அடைய நேரிடும். எனவே வார்த்தைகளில் நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியமாகும்.
 
அதிர்ஷ்ட திகதி : 4 
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)
 
 
 
தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
அனைவரிடமும் அன்பு காட்டும் உள்ளமும் தீமைகளை கண்டு விலகி செல்லும் பக்குவம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் நல்ல நண்பர்களின் உறவுகள் கிடைக்கும் இதனால் மனதில் மகிழ்ச்சி உருவாகும். வெளியிடங்களுக்கு சென்று  மகிழ்ச்சியுடன்  இருப்பீர்கள். பெண்களுக்கு நன்மை அதிகம். வார இறுதியில் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியையே தழுவும். பணப்பிரச்சினை அதிகரிக்கும். விலை மதிக்க முடியாத பொருள் சேதம் அடையும். கை கால்களில வாதம் பித்தம் சம்மந்தப்பட்ட நோய் ஏற்பட்டு நீங்கும். உணவில் நாட்டம் குறையும். யோசனை அதிகரிக்கும்.  
 
அதிர்ஷ்ட திகதி : 29
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்
 
 
 
மகரம் 
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதில் இறைவனுக்கு முதலிடம் அளிக்கும் மகர ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் தொழிலில் புதிய முயற்சிகள் செய்து வியாபாரத்தை பெருக்கிக்கொள்வீர்கள். குடும்பத்தில் உடன் பிறந்தவர்களின் வருகையினால் மகிழ்ச்சி உண்டாகும்.  சக  ஊளியர்களினால் நன்மை உண்டாகும். புதிய முயற்ச்சிகள் அனேக தடைகளுக்கு பின்னரே வெற்றி அடையும். வார இறுதியில்  மற்றவர்களினால் பிரச்சினைகள் காணப்படும். கெட்ட கனவுகளால் துன்பங்களை அடைய நேரிடும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு உண்டாகும். சில தவிர்க்க முடியாத செலவுகள் உண்டாகும். மனம் சஞ்சலமடையும்.
 
அதிர்ஷ்ட திகதி : 29
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான் 
 
 
 
கும்பம்
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
எதற்கும் தளராத நெஞ்சமும் ஆடம்பரம் இன்றி வாழ விரும்பும் கும்ப ராசி அன்பர்களே..!
 
வியாபாரத்தில் புதிய வழி கிடைக்கப் பெற்று அதிக லாபங்களை அடைவீர்கள். வேறு இடமாற்றம் மனதில் மாறுதல்களை உண்டாக்கும். வீட்டில் களவுபோகும் சூழ்நிலைகள் உண்டாகலாம். எனவே, கவனத்துடன் இருப்பது அவசியமாகும். தேவையில்லாத பேச்சுகளால் மனக்கஷ்டங்கள் உண்டாகும். இதனால் வீண் அலைச்சல் காணப்படும். பணியில் அதிகாரிகளுடன் சுமூகமான உறவினை வளர்த்துக் கொள்வது அவசியமாகும். மற்றும் நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியமாகும்.
 
அதிர்ஷ்ட திகதி : 30
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர 
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா
 
 
 
மீனம் 
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9- பாதங்கள்.
 
தனக்கென்று மட்டும் எண்ணாது பிறரின் நலனுக்காக செயல்படும் பரந்த உள்ளம் கொண்ட மீனம் ராசி அன்பர்களே..!
   
இந்தவாரம் சில நல்ல மனிதர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் புதிய வழிகள் ஏற்பட்டு லாபங்கள் அதிகளவில் கிடைக்கப்பெறுவீர்கள். தாயிற்கு நன்மை அதிகம். வெளிநாடு செல்லும் வாய்புண்டு. மனநிறைவான வாழ்க்கை அமையும். புதிய சொத்துக்கள் சேரும். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுவார்தைகளை மேற்கோள்ளலாம். தேவைக்கேற்ப பணவரவு உண்டாகும். மனநிம்மதி அதிகரிக்கும்.
 
அதிர்ஷ்ட திகதி : 4
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .