2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

இந்தவார பலன்கள் (31.08.2014 - 06.09.2014)

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 30 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}இந்தவார பலன்கள் (31.08.2014 - 06.09.2014)
 
மேடம்
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
சமூக சீர்திருத்த சிந்தனை கொண்ட மேட ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்த்து உயரும். பூர்வீக சொத்து கைக்கு வரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பெண்கள் வருங்காலத்திற்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வீண் சந்தேகங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்வீர்கள். வேலையாட்களிடம் பணிவாக பேசி வேலை வாங்குவது நல்லது. விலகிச் சென்றவர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவீர்கள். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறும் வாரமிது. 
 
அதிர்ஷ்ட திகதி : 6 
அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
 
 
இடபம் 
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
பகிர்ந்தளித்து பிறர் பசி போக்கும் இடப ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் குழப்பங்கள் தடுமாற்றங்கள் நீங்கி தெளிவான முடிவெடுப்பீர்கள். வீண் விவாதங்கள் நீங்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். தாயாருடன் இருந்து வந்த மனத்தாங்கள் நீங்கும். அரசாங்க காரியங்கள் சுமூகமாக முடியும். வியாபாரத்தில் நவீன யுக்திகளைகக் கையாளுவீர்கள். வாடிக்கையாளர்களிடம் கணிவாகப் பேசுவது நல்லது. பலர் உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புக்களை ஒப்படைப்பார்கள். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். 
 
அதிர்ஷ்ட திகதி : 2 
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்) 
 
 
 
மிதுனம்
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
தனக்கென எதுவும் தேக்கி வைத்துக்கொள்ளாத மிதுன ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம்  குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். மகிழ்ச்சி உண்டாகும். ஆடை ஆபரணம் சேரும்.  உயர்கல்வி போட்டித்தேர்வு பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்து கொள்வார்கள். நெருங்கியவர்களுடன் கருத்து மோதல்கள் வரும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். புதிய முதலீடுகளைப்பற்றி நம்பிக்கைக்குரியவர்களிடம் விவாதிப்பீர்கள். வரவேண்டிய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு கூடும். தோல் சம்;மந்தமான நோய்களுக்கு ஆளாக நேரிடும் எனவே கவனம் அவசியம். 
 
அதிர்ஷ்ட திகதி : 1 
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி
 
 
 
கடகம் 
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.
 
வருங்கால திட்டங்களை வடிவமைப்பதில் வல்லவர்களான கடக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் நண்பர்கள் மூலமாக சில நன்மைகள் கிடைக்கும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. உறவினர் வீட்டு விசேஷங்களை முன்நின்று நடத்துவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வெளிநாட்டு வாய்ப்புக்கள் உண்டாகும். உடன் பிறப்புக்கள் உங்களுக்கு உதவுவார்கள். வேலையாட்களால் வியாபாரத்தின் தரம் உயரும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. சக ஊழியர்கள் ஏதேனும் குறை கூறி;க் கொண்டே இருப்பார்கள். விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. 
 
அதிர்ஷ்ட திகதி : 03
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல் 
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்) 
 
 
 
சிம்மம்
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
சாதுர்யமான பேச்சால் எதிராளிகளை கலங்கடிக்கும் சிம்ம ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் தொலை நோக்கு சிந்தனையின் மூலம் சாதிப்பீர்கள். உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் அவர்களிடம் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. தடைப்பட்ட வேலைகள் முடியும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை தீர்க்க முயற்சி செய்வீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை மற்றும் இடமாற்றம் உண்டாகும். 
 
அதிர்ஷ்ட திகதி : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)
 
 
 
கன்னி 
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
நாடி வந்தவர்களுக்கு நல்லதையே செய்யும் கன்னி ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் உணர்ச்சிவசப்பட்டு சில நேரம் பேசி விடுவீர்கள். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக்கொண்டு இருந்ததை வாங்கி கொடுப்பீர்கள். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்து கொள்வார்கள். பூர்வீக சொத்தை சீரமைப்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். குலதெய்வ பிரார்தனைகளை முடிப்பீர்கள். அரசாங்க விஷயங்கள் சற்று தாமதமாக முடியும். புதிய முதலீடு செய்து வியாபாரத்தைப் பெறுக்குவீர்கள். சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பீர்கள். பெண்கள் தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கி தள்ளுவீர்கள். 
 
அதிர்ஷ்ட திகதி : 6
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி
 
 
 
துலாம்
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.
 
யார் என்ன பேசினாலும் கலங்காத துலா ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் வேலைச்சுமை இருந்தாலும் முகமலர்ச்சியுடன் சமாளிப்பீர்கள். எந்த ஒரு முடிவுகளையும் மிகத் தெளிவாக எடுப்பீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். தந்தை வழி உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்;. புதிய பொறுப்புக்களும் பதவிகளும் உங்களைத் தேடி வரும். ஆரோக்கிய விஷயத்தில் அக்கறை காட்டுவது நல்லது. சின்ன விஷயமாக இருந்தாலும் சிறிது தடைபட்டு முடியும். எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. தடைகளையும் தாண்டி சாதிக்கும் வாரமிது. 
 
அதிர்ஷ்ட திகதி : 4
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி
 
 
 
விருட்சிகம்
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.
 
வாழ்க்கையில் தடைகளை தகர்க்கும் விருச்சிக ராசி அன்பர்களே..!
 
இந்த வாரம் எந்த காரியமாக இருந்தாலும் இரண்டாவது அல்லது மூன்றாவது முயற்சியில் தான் முடிவடையும். இருந்தாலும் பல சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக அமையும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வங்கிக் கடன்கள் கிடைக்கும். சகோதரர்களை அனுசரித்துப் போவது நல்லது. உயர்கல்வி சம்மந்தப்பட்ட குழப்பங்கள் நீங்கும். தொழில் தொடங்கும் முயற்ச்சி வெற்றியடையும். வாடிக்கையாளர்கள் உங்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். இடைவிடாத உழைப்பால் இலக்கை எட்டிப்பிடிக்கும் வாரமிது. 
 
அதிர்ஷ்ட திகதி : 01
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர 
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா
 
 
 
தனுசு
மூலம், பூராடம்,  உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
வாதாடும் குணம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் சோர்வு களைப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். புதிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். திடீர் பயணங்களால் திருப்பங்கள் உண்டாகும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நபர்களை சந்திப்பீர்கள். உங்களுடைய கோபத்தினால் சில சமயம் உங்களுக்கே கூட உங்களைப் பிடிக்காமல் போகும். பெண்கள் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்குவீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். 
 
அதிர்ஷ்ட திகதி : 31
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல் 
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்) 
 
 
 
மகரம் 
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
இடம் பெயர்ந்து சென்றாலும் குலப்பெருமையை காப்பாற்றும் மகர ராசி அன்பர்களே..!
 
இந்த வாரம் போராடும் காரியங்கள் வெற்றியடையும். சகோதர வகையில் நன்மை உண்டு. நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பார்கள். தந்தை வழியில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். கோபப்பட்டு யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். பெண்களின் புதிய திட்டங்களுக்கு பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். ஊழியர்கள் உங்கள் வேலையைப் பகிர்ந்து கொள்வார்கள். வளைந்து கொடுத்து வளரும் வாரமிது. 
 
அதிர்ஷ்ட திகதி : 04
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள் 
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்
 
 
 
கும்பம்
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
தன் பத்து விரல்களையே சொத்தாக நினைக்கும் கும்ப ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் அரசு காரியங்கள்; நல்ல விதத்தில் முடியும். சகோதர வகையில் ஆரோக்கியமான விவாதங்கள் வரும். ஒரு சொத்தை விற்று சில பிரச்சனைகளில் இருந்து வெளி வருவீர்கள். பிள்ளைகளின் பிடிவதாக குணம் மாறும். தாயாருடன் மனக்கசப்புகள் வந்து நீங்கும். அரசாங்க விஷயங்களில் அலட்சியப் போக்கு வேண்டாம். உங்களைப்பற்றி சின்ன சின்ன விமர்சனங்கள் வரக்கூடும். பழைய கடன்களை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். அதிகாரிகள் தவறுகளை சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். 
 
அதிர்ஷ்ட திகதி : 03 
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி
 
 
 
மீனம் 
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.
 
தன்னலத்தை ஒருபோதும் விரும்பாத மீன ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பிள்ளைகள் உங்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். மனதில் ஒருவித பயம் உண்டாகும். பெரிய நோய் இருப்பதைப் போன்று உணர்வீர்கள். நெருக்கமாக பழகிய சிலர் ஒதுங்கி செல்வார்கள். சின்ன சின்ன விபத்துகள் பண இழப்பு ஏமாற்றம் மன வருத்தங்கள் வரக்கூடும்.  வியாபாரத்தில் உடன் இருப்பவர்களால் விரயம் உண்டாகும். முக்கிய கோப்புக்களைக் கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சக ஊழியர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிரடி திட்டங்களால் வெற்றி பெறும் வாரமிது. 
 
அதிர்ஷ்ட திகதி :  03
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம் : குருபகவான்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .