2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

இந்தவார பலன்கள் (15.02.2015 – 21.02.2015)

A.P.Mathan   / 2015 பெப்ரவரி 15 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தவார பலன்கள் (15.02.2015 – 21.02.2015)

மேடம்
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

புரட்சிகரமாக யோசிக்கும் மேட ராசி அன்பா்களே..!

இந்தவாரம் அனுபவ அறிவால் சாதிப்பீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். மனைவி வழி உறவினர்களிடையே மதிப்பு கூடும். வீட்டில் கூடுதல் தளம் அமைப்பது அறை கட்டுவது போன்ற முயற்ச்சிகள் பலிதமாகும். வங்கிக் கடன் உதவி கிட்டும். புது வாகனம் வாங்குவீர்கள். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். மகனுக்கு வெளி நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். திடீர் பயணங்களால் அவ்வப்போது சோர்வு களைப்புடன் காணப்படுவீர்கள். வழக்குகளில் தீர்ப்பு தள்ளிப் போகும்.  புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு ஒரு அங்கீகாரம் இல்லாமல் போகும். சகிப்புத் தன்மையால் சாதிக்கும் வாரமிது. 

அதிர்ஷ்ட திகதி : 15
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்

 

இடபம்
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

ஆழமாகவும் அழுத்தமாகவும் பேசும் இடப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். சொந்த பந்தங்களின் சுயரூபங்களை அறிந்து கொள்வீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் உங்களை கண்டும் காணாமல் போவார்கள். அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். உயரதிகாரிகள் பாராபட்சமாக நடந்து கொள்வார்கள். 

அதிர்ஷ்ட திகதி : 20
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல் 
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்) 

 

மிதுனம்
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

யதார்த்தமாக பேசும் மிதுன ராசி அன்பர்களே..!

இந்தவாரம் பணப்புழக்கம் அதிகமாகும். தைரியம் கூடும். மனோபலம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். அரசாங்க காரியங்களில் அலட்சியம் வேண்டாம். தந்தையின் உடல் நல விஷயத்தில் அவ்வப்போது கவனம் தேவை. கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். மேலும் சின்னச்சின்ன ஏமாற்றங்;கள் மறைமுக விமர்சனங்கள்; அவ்வப்போது வந்து செல்லும். வியாபாரத்தில் இரட்டிப்பு  லாபம் உண்டாகும். சிலர் புது கிளைகள் தொடங்குவார்கள். வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். விடாமுயற்சியால் விட்டதைப் பிடிக்கும் வாரமிது. 

அதிர்ஷ்ட திகதி : 18
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி

 

கடகம் 
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

தலைமைப் பண்பு அதிகம் உள்ள கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். வேற்றுமதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்றார்போல் பொறுப்பாக இருப்பார்கள். அவர்கள் இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்தால் நலமாக இருக்கும் என்று கவலைப்படுவீர்கள். பூர்வீக சொத்தை விற்று சில பிரச்சனைகளில் இருந்து வெளி வருவீர்கள். களைப்பு நீங்கி உற்சாகமடைவீர்;கள். சுறுசுறுப்பாக பல வேலைகளை செய்து முடிப்பீர்கள். உறவினர் நண்பர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். டென்ஷன் குறையும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனத்தாங்கல்கள் நீங்கும். சில நேரங்களில் மற்றவர்களுக்காக நியாயம் பேசப்போய் வம்பில் சிக்கிக் கொள்வீர்கள். இரகசியங்களைக் காக்க வேண்டிய வாரமிது. 

அதிர்ஷ்ட திகதி : 20
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல் 
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்) 

 

சிம்மம்
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

மற்றவர்களுக்காக தன்னை மாற்றிக் கொள்ளாத சிம்ம ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்கள் பேச்சில் கனிவு கூடும். பிரபலங்களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். புதிய வேலை கிடைக்கும். வேலைச்சுமை அதிகாரிக்கும் வாகனங்கள் அடிக்கடி செலவு வைக்கும். கணவன் - மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. சொத்து வாங்குவது விற்பதில் அவ்வப்போது சிக்கல்கள் வந்து நீங்கும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். எல்லா பிரச்சனைகளையும் சமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். சக ஊழியர்களால் மறைமுகமாக நெருக்கடி வந்து நீங்கும்.  வளைந்து கொடுக்க வேண்டிய வாரமிது. 

அதிர்ஷ்ட திகதி : 19
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)

 

கன்னி 
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

ஆகாயக் கோட்டை கட்டும் கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவாரம் குடும்பத்தில் நல்லது நடக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.  சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். திடீர் பணவரவு உண்டு. வீடு வாகன வசதி பெருகும். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படும். வாகனத்தில் செல்லும் பொழுது கவனம் தேவை. சிறு சிறு விபத்துக்கள் ஏற்படக்கூடும். கொடுக்கல் வாங்கலில் நிம்மதி ஏற்படும். மறைமுக போட்டிகள் இருந்தாலும் வெற்றி உண்டு. அதிகாரிகளால் அழைக்கழிக்கப்பட்டாலும் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். அமைதி காக்க வேண்டிய வாரமிது. 

அதிர்ஷ்ட திகதி : 18
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி

 

துலாம்
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதங்கள்.

மறப்போம் மன்னிப்போம் என்றிருக்கும் துலா ராசி அன்பர்களே..!

இந்த வாரம் குடும்ப பொறுப்புக்கள் அதிகரிக்கும். கடன் பிரச்சனைகள் ஒருபக்கம் விரட்டினாலும் இங்கிதமாக பேசி வட்டியை தருவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமையத்தில் கிடைக்கும். பிள்ளைகளால்; அலைச்சல் மற்றும் செலவுகள் வந்து போகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வீண் சந்தேகம் மற்றும் மறைமுக எதிர்ப்புக்கள் கௌரவக் குறைவான சம்பவங்கள் நடந்தேறும் பணியிடங்களில் பணியாட்களின் ஒத்துழைப்பு குறையும். பங்குதாரர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது, இழுபறியான நிலைமாறி ஓரளவு ஏற்றம் பெறும் வாரமிது. 

அதிர்ஷ்ட திகதி : 18
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி

 

விருட்சிகம்
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

தன்மானம் அதிகம் உள்ள விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்த வாரம் புதிய முயற்ச்சிகள் யாவும் நிறைவேறும். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.  உறவினர்களிடையே மதிப்பு கூடும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை உட்கொள்ள வேண்டாம். வேற்று மதத்தைச் சார்ந்தவர்கள் நன்பர்களாவார்கள். முன்கோபத்தைத் தவிர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். அதிரடியாக வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புக்களை ஏற்பீர்கள். ஊழியர்கள் உங்கள் வேலையை பகிர்ந்து கொள்வார்கள். முற்போக்கு சிந்தனையால் முன்னேறும் வாரமிது. 

அதிர்ஷ்ட திகதி : 21
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர 
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா

 

தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

நீதிக்காக வளைந்து கொடுக்கும் தனுசு ராசி அன்பர்களே..!

இந்தவாரம் நிர்வாகத் திறமை கூடும். ஓரளவு பணம் வரும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் அடிமனதில் இருக்கும் பயத்தைப் போக்குவீர்கள். அரசாங்கத்தாலும் அதிகாரப்பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வழக்கால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தடைபட்ட காரியங்கள் விரைந்து முடியும். குறுக்கு வழியில் ஆதாயம் தேட வேண்டாம். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பெற்றோருடன் கலந்து ஆலோசித்து வருங்காலம் பற்றிய சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். திடீரென்று அறிமுகமானவரை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் ரகசியங்கள் எங்கே கசிகிறது என்று கண்டறிந்து அவற்றை சரிசெய்வீர்கள். கோபத்தை அடக்குவதால் மகிழ்ச்சி பொங்கும் வாரமிது. 

அதிர்ஷ்ட திகதி : 21
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல் 
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்) 

 

மகரம் 
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கடந்த காலத்தை எளிதில் மறக்காத மகர ராசி அன்பர்களே..!

இந்தவாரம் குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் வருங்கால் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.  வாழ்வின் சூட்சுமத்தை உணர்வீர்கள். ஆன்மீக வாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். சாதாரணமாகப் பேசப்போய் சண்டையில் முடியும். அவ்வப்போது உணர்ச்சி வசப்படுவீர்கள். கண் பார்வைக் கோளாறு பல் வலி வந்து போகும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.  பணியிடத்தில் மூத்த அதிகாரிகள் அறிவுரை தருவார்கள். சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். திட்டமிடுதல் மூலம் சாதிக்கும் வாரமிது. 

அதிர்ஷ்ட திகதி : 18
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல் 
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்) 


கும்பம்
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

காசு கேட்பவர்களுக்கு கொடுத்து உதவும் குணம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் புத்துணர்ச்சி பெருகும். உறவினர்கள் நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்து கொள்வார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். பிரியமானவர்களைச் சந்திப்பீர்கள். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரிவடையும்.;.அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். மனைவியின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். தவறானவர் களையெல்லாம் நல்லவர்கள் என்று நினைத்து ஏமாந்து விட்டோமோ என்ற ஒரு ஆதங்கம் வந்து போகும். வியாபாரத்தில் ஆதாயம் சுமாராகத் தான் இருக்கும். தேங்கிக் கிடக்கும் சரக்குகளை சலுகைகள் மூலம் விற்றுத் தீர்ப்பீர்கள். வேலைச்சுமைகள் அதிகரிக்கும் வாரமிது. 

அதிர்ஷ்ட திகதி : 15
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்

 

மீனம் 
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.

செய் நன்றி மறவாத மீன ராசி அன்பர்களே..!

இந்தவாரம் நினைத்த காரியம்  சுலபமாக முடியும். மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். கோவில் விசேஷங்களில் முதல் மரியாதை கிட்டும். பணப்பற்றாக்குறையை லாவகமாக சமாளிப்பீர்கள். கண்டும் காணாமல் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும். சகோதர வகையில் சங்கடங்கள் வந்து போகும். வாகனத்தில் செல்லும் பொழுது அலைபேசியில் பேச வேண்டாம். யாருக்காகவும் முன்நின்று பேச வேண்டாம்.  புதிய ஏnஐன்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் தொலை நோக்கு சிந்தனையை அனைவரும் பாராட்டுவர். அனுசரித்துப் போவதால் வெற்றி பெறும் வாரமிது. 

அதிர்ஷ்ட திகதி : 21
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம் : குருபகவான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .