2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

இந்தவார பலன்கள் (07.06.2015 - 13.06.2015)

Menaka Mookandi   / 2015 ஜூன் 06 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தவார பலன்கள் (07.06.2015 - 13.06.2015)

 

அஸ்வினி , பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்

அனைத்தையும் அறிந்துகொள்ள ஆசைப்படும் மேட ராசி அன்பர்களே...!

இந்த வாரம் நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். சகோதர வகையில் இருந்த மன வருத்தம் மாறும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். பெண்களின் புதிய முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் பணியாளர்களின் ஒத்துழைப்பபால் விரைந்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியைக் கொடுக்கும். உங்களை புரிந்துகொள்ளாதவர்கள் உங்களை புரிந்துகொண்டு பாராட்டுவார்கள். இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும்.
அதிர்ஷ்ட திகதி: 8
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்

 

கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1௨ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்

புரட்சிகரமான சிந்தனை அதிகம் உள்ள இடப ராசி அன்பர்களே...!

இந்த வாரம் வாழ்;க்கையின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். வெற்றிபெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். வேற்று மதத்தவர் மற்றும் மொழியினரால் ஆதாயமடைவீர்கள். வேலைக்கு முயற்சி செய்த இடத்தில் இருந்து நல்ல பதில் கிடைக்கும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பராமரிப்பு வகையில் இருந்து வந்த செலவுகள் குறையும். இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பெண்கள் நிஜம் எது நிழல் எது என்பதை உணர்வீர்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். அதிரடி முன்னேற்றங்கள் தரும் வாரமிது.
அதிர்ஷ்ட திகதி: 12
அதிஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுதுணி
அதிஷ்ட தெய்வம்: குருபகவான்

 

மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்

மற்றவர்களை மனமுவந்து பாராட்டும் மிதுன ராசி அன்பர்களே...!
          
இந்த வாரம் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடுவது நல்லது. நண்பர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டுவருவீர்கள்;. இதமாகப் பேசி மற்றவர்களை உங்கள் பக்கம் கவர்வீர்கள். கடினம் என்று நினைத்த பணியைக் கூட மிக எளிதாக முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திகதி: 12  
அதிர்ஷ்ட நிறம்:  பச்சை மஞ்சள்  
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்

அதர்மங்களை தட்டிக்கேட்கத் தவறாத கடக ராசி அன்பர்களே...!

இந்த வாரம் எவ்வளவு பிரச்சினை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை பிறக்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த வேலை முடியாவிட்டாலும் எதிர்பாராத சில வேலைகள் முடிவடையும். உடல் மற்றும் மனம் சோர்வடையும் தாயாருக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும். உறவினர் மற்றும் நண்பர்களிடத்தில் கவனமாக இருப்பது நல்லது. பூர்வீக சொத்து விடயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி இலாபம் வரும்.
அதிர்ஷ்ட திகதி: 10
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, சிகப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி

 

மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்

தெளிந்த நீரோடை போல் தீர்க்கமாக முடிவெடுக்கும்  சிம்ம ராசி அன்பர்களே...!

இந்த வாரம் யாரையும் நம்பி பொறுப்புக்களை ஒப்படைக்க வேண்டாம். வாகன பயணத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றுவது நல்லது. பள்ளி கால நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். சகோதர வகையில் இருந்த பிணக்கங்கள் குறையும். பெண்களின் உயர்கல்விக்கு உண்டான பணத்தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருவீர்கள். நீண்ட நாட்களாக முடியாது என்று நினைத்த காரியம் ஒன்று கைகூடி வரும். இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும்.
அதிர்ஷ்ட திகதி: 13
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)


உத்திரம் 2, 3, 4 அஸ்தம்  சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்

அதிகாரத்தை விட அன்புக்கு அதிகம் கட்டுப்படும் கன்னி ராசி அன்பர்களே...!

இந்த வாரம்  உங்களின் புகழ் கௌரவம் ஒருபடி உயரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வாகனங்களை இயக்கும் பொழுது கவனம் தேவை. வாக்குறுதிகளை நிறைவேற்ற போராட வேண்டி இருக்கும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் உண்டாகும். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை தெரிந்துகொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திகதி: 7
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா


சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதங்கள்

எல்லோரிடத்திலும் சமாதானத்தை எதிர்பார்க்கும் துலா ராசி அன்பர்களே...!     

இந்த வாரம்  மாறுபட்ட யோசனைகள் தோன்றும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வீடு மாறும் திட்டங்கள் உருவாகும். சகோதர வகையில் இணக்கமான சூழ்நிலைகள் உருவாகும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். நோய்கான அறிகுறிகள் வந்து நீங்கும். அரசு காரியங்கள் சுலபமாக முடியும்.  பெண்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் உண்டாகும்.  யாரிடமும் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
அதிர்ஷ்ட திகதி: 11
அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)

 

விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்

நெருக்கடி நேரத்திலும் நிமிர்ந்து நிற்கும் விருட்ச்சிக ராசி அன்பர்களே...!

இந்த வாரம் கம்பீரமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். திடீர் பண வரவு உண்டாகும். பெரிய மனிதர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பழைய கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய பதவிகள் தேடி வரும். பூர்வீக சொத்தில் ஒரு பங்கு கைக்கு வரும். உங்களின் ஆலோசனைகளை உயரதிகாரிகள் ஏற்பார்கள். வியாபாரத்தில் பிரபலமான இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறும் வாரமிது.
அதிர்ஷ்ட திகதி: 11
அதிர்ஷ்ட நிறம்: சிகப்பு, ஆரஞ்சு
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)


மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்

சட்ட திட்டங்களை உருவாக்குவதுடன் பின்பற்றுவதிலும் வல்லவர்களான தனுசு ராசி அன்பர்களே...!

இந்த வாரம் குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பணவரவு திருப்தி தரும். பழைய பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். பிள்ளைகளிடம் குவிந்து கிடக்கும் திறமைகளை இனம் கண்டு வளர்ப்பீர்கள். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். சகோதர வகையில் நல்ல மாற்றம் உண்டாகும். அவ்வப்போது வாகன செலவுகள் வந்து நீங்கும். உறவினர்களுடன் பிணக்கங்கள் உண்டாகலாம். கவனம் அவசியம். பெண்கள் அவர்களின் இலக்கை நோக்கி முன்னேறுவார்கள். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்பையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

அதிர்ஷ்ட திகதி: 12
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்


உத்திராடம் 2, 3, 4 திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்

தன்மானத்தை ஒரு போதும் விட்டுக்கொடுக்காத மகர ராசி அன்பர்களே...!
    
இந்த வாரம் தன்னிச்சையாகவே முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். தந்தை வழியில் சொத்து வந்து சேரும். முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு நிர்வாகிகளின் மனதில் இ;டம் பிடிப்பீர்கள். வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். புதிய விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபம் காண்பீர்கள். ரசனைக் கேற்ப வீட்டை மாற்றியமைப்பீர்கள். வெளிமாநிலத் தொடர்புள்ள நிறுவனங்களில் புதிய ஒப்பந்தங்கள் செய்வீர்கள். பிறந்த வீட்டில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் வந்து சேரும். நீண்ட கால எண்ணம் நிறைவேறும்.
அதிர்ஷ்ட திகதி: 12
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்

 

அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்

உலகத்தைப் பற்றி கவலைப்படாமல் உங்களுக்கு சரியென பட்டதை செய்யும் கும்ப ராசி அன்பர்களே...!

இந்த வாரம் திடீர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். மனைவியுடன் அடிக்கடி விவாதம் வரும். பழைய சம்பவங்களைப் பற்றி பேசாமல் இருப்பது நல்லது. வாகன வகையில் செலவுகள் வந்து போகும்.  திருமணம் கிரகப்பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகளை முன்நின்று நடத்துவீர்கள். பிள்ளைகளில் பிடிவாதத்தை சமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.  உங்களை நம்பி சிலர் தலைமைப் பொறுப்புக்களை ஒப்படைப்பர். பெண்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். வியாபாரத்தில் ஆர்வம் குறைந்து காணப்படும். இதனால் வியாபாரத்தில் லாபம் குறையும் வாய்ப்புள்ளது. எனவே கவனம் அவசியம்.
அதிர்ஷ்ட திகதி: 12
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா


பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி; முடிய ஆக 9-பாதங்கள்

கௌரவம் சுய மரியாதை போன்றவற்றைப் பார்த்து நல்ல வாய்ப்புக்களை இழக்கும் மீன ராசி அன்பர்களே...!

இந்த வாரம் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. பங்குகளின் மூலம் பணவரவு உண்டு. பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து போவது நல்லது. மனதில் ஒரு தெளிவு பிறக்கும். மற்றவர்கள் விஷயத்தில் தள்ளியிருப்பது நல்லது. வியாபாரத்தில் கமிஷன் வகையில் இலாபம் வரும். பணியாட்களிடையே பிரச்சனைகள் வந்து போகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கியே இருக்கும். தொலை நோக்கு மற்றும் மாறுபட்ட சிந்தனையால் முன்;னேறும் வாரமிது.
அதிர்ஷ்ட திகதி: 10
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, சிகப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .