2023 ஜூன் 07, புதன்கிழமை

கௌரவிப்பு

Editorial   / 2020 ஜனவரி 02 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.எம்.ஏ.காதர்

இலங்கை எழுத்தாளரும் ஆய்வாளருமான சம்மாந்துறை இப்றா லெவ்வை ஜலீல், அவரது எழுத்துப் பணிக்காக, இந்தியாவுக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

தாம்பரத்தில் இயங்கிவரும் தமிழ் நாடு பத்திரிகை தொடர்பாளர்கள் நலச்சங்கம், இலங்கை ஊடகவியலாரான இப்றா லெவ்வை ஜலீலுக்கு, “ஊடக மாமணி விருது" வழங்கி, பொன்னாடைப் போர்த்தி கௌரவித்துள்ளது. அம்மா தமிழ் பீடத்தின் நிறுவுனர் சொல்லின் செல்வர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இப்றா லெவ்வை ஜலீல், பொன்னாடை போர்த்தி, விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

உலகறிந்த பெரும் ஆளுமை பேராசிரியர் முனைவர், உலகப்புகழ் கவிவேந்தர் மு.மேத்தா, தனது இல்லத்துக்கு இலங்கை ஜலீல் ஜீயை அழைத்து "பொன்னாடை போர்த்தி" பாராட்டி கௌரவித்துள்ளர்.
மேலும் பல அமைப்புக்கள் இவரைப் பாராட்டி கௌரவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .