2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வித்தியா படுகொலை வழக்கு: யாழிலேயே ‘ட்ரயல் அட்பார்’

எம். றொசாந்த்   / 2017 மே 23 , பி.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கு விசாரணை, ‘ட்ரயல் அட்பார்’ முறையில் யாழ்.மேல் நீதிமன்றிலேயே மிகவிரைவில் நடைபெறவுள்ளது என, தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த வழக்கை விசாரணை செய்வதற்கு, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசி மகேந்திரன் தலைமையில், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை, பிரதம நீதியசர், நேற்று (23) நியமித்து உள்ளார்.   

குறித்த வழக்கின் குற்ற பகிர்வுப் பத்திரம், சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்.மேல் நீதிமன்றத்துக்கு கடந்த 12ஆம் திகதியன்று அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அவை தற்போது, மேல் நீதிமன்றத்தில், இரும்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.   
குறித்த வழக்கு விசாரணை, ‘ட்ரயல் அட்பார்’ முறையில் கொழும்பில் நடைபெறவுள்ளதாக முன்னர் செய்தி வெளியாகி இருந்தது.

அதனையடுத்து, இந்த வழக்கை யாழ்ப்பாணத்தில் நடத்த வேண்டும் என, மாணவியின் தாயார், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.   

அதேவேளை, வழக்கு யாழ்ப்பாணத்தில் நடைபெற வேண்டும் எனக் கோரி யாழில் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .