2021 ஜூன் 14, திங்கட்கிழமை

தம்புள்ளையில் டெங்கு அதிகம்

Kogilavani   / 2017 மே 23 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
 காஞ்சன குமார ஆரியதாச

தம்புள்ளைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக தம்புள்ளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி காமினி சேனாநாயக்க தெரிவித்தார்.

தம்புள்ளை பஸ் தரிப்பிடம் மற்றும் பொதுச் சந்தையில் தொழில்புரிந்து வரும் ஊழியர்களே, டெங்கு காய்ச்சலினால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 20 டெங்கு நோயாளார்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும் வைத்திய அதிகாரி மேலும் கூறினார்.

எனவே, டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக, சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .