Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Thipaan / 2016 நவம்பர் 22 , பி.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா திபான்
தனது மருத்துவ பரிசோதனைகளுக்காக, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 10ஆம் திகதியிலிருந்து மார்ச் மாதம் 2ஆம் திகதிவரை அமெரிக்காவுக்குச் செல்ல அனுமதியளிக்குமாறு, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தனது சட்டத்தரணியூடாக, கொழும்பு மேல்நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பான தமது ஆட்சேபணைகளை, நாளை மறுதினம் வௌ்ளிக்கிழமை (25) அறிவிக்குமாறு, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசலா வீரவர்தன, சட்டமா அதிபருக்கு நேற்றுச் செவ்வாய்க்கிழமை (22) அறிவித்தார்.
தனது தரப்புக்காரரான பசில் ராஜபக்ஷவுக்கு, டிசெம்பர் 13, 14ஆம் திகதிகளில் மருத்துவ பரிசோதனைக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளதாக, பசில் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்தார். இதனைக் கருத்திலெடுத்த நீதிபதி, இது தொடர்பில் சட்டமா அதிபரின் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கு மேற்குறித்த திகதியை அறிவித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ஜனாதிபதி வேட்பாளராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு ஜி.ஐ குழாய்களை வழங்குவதற்காக, அரசாங்க நிதியிலிருந்து 3.5 பில்லியன் ரூபாய் வழங்கப்பட்ட குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டிருந்த பசில் ராஜபக்ஷ, கடுவெல நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இருப்பினும், அவரது வெளிநாட்டு பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில், கொழும்பு மேல்நீதிமன்றத்தில் மீளாய்வு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அம்மனுவே, நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
04 May 2025
04 May 2025