Janu / 2025 நவம்பர் 03 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரால் வழங்கப்பட்ட பொலிஸ் விளையாட்டு பாதணிகளை அணிந்து புதுக்கடை மேல் நீதிமன்றத்திற்கு சென்ற, போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டதாக வாழைத்தோட்டம் பொலிஸார் தெரிவித்தனர்
சந்தேக நபர் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய , ராஜகிரிய, ஒபேசேகரபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
ஹெரோயின் போதைப்பொருளை தம் வசம் வைத்திருந்ததற்காக சந்தேக நபருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்காக வந்த போது பொலிஸ் விளையாட்டு பாதணிகளை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையின் போது, பகோடை போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் தனக்கு குறித்த பாதணிகளை கொடுத்ததாகக் சந்தேக நபர் கூறியுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago