Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 டிசெம்பர் 03 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
ஊர்காவற்துறை இரட்டை கொலை வழக்கில் 36ஆவது சாட்சியாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இணைத்துக்கொள்ளப்பட்ட நீதவான் சரோஜினி இளங்கோவன், நேற்று வெள்ளிக்கிழமை (02), மேல் நீதிமன்றில் ஆஜராகி தனது சாட்சியினைப் பதிவு செய்தார்.
2001ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் திகதி ஊர்காவற்துறைப் பகுதிக்கு தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்ற கூட்டமைப்பினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான தொடர் விசாரணை யாழ். மேல் நீதிமன்றில் கடந்த பத்து நாட்களாக இடம்பெற்று வருகின்றது.
10ஆவது நாளான நேற்று (02), சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியான 2001ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நீதவானாகக் கடமையாற்றிய சரோஜினி இளங்கோவன் மன்றில் முன்னிலையாகியிருந்தார். சாட்சியினை சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி மன்றாதிபதி நாகரட்ணம் நிசாந் சாட்சியினை நெறிப்படுத்தியிருந்தார்.
கேள்வி:- ஊர்காவற்துறை இரட்டை படுகொலை தொடர்பில் கைதான சந்தேகநபர்களின் அடையாள அணிவகுப்பு எப்போது நடைபெற்றது.
பதில்:- 11-12.2001ஆம் ஆண்டு பி.ப 1:00 மணியளவில்
கேள்வி:- உங்களால் மேற்கொள்ளப்பட்ட அடையாள அணிவகுப்பு எங்கு இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் நீதிமன்றில். அன்றைய காலப்பகுதியில் ஊர்காவற்துறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லை யாழ்ப்பாணம் நீதிமன்ற நியாயாதிக்கத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.
கேள்வி:- அன்றையதினம் அடையாள அணி வகுப்பபுக்கு உட்படுத்தப்பட்ட போது அடையாளம் காட்ட எத்தனை சாட்சிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.
பதில்:- இரண்டு சாட்சிகள். 1) ஆரியரட்ணம் ஜோதிபாலா 2) கனகரட்ணம் விந்தன்.
கேள்வி:- யார்? யார்? அடையாளம் காட்டினார்கள்?
பதில்:- இரண்டாவது சாட்சியான ஆரியரடணம் ஜோதிபாலா அன்ரன் ஜீவராஜ் அல்லது ஜீவன் என்பவரை அடையாளம் காட்டியிருந்தார் என சாட்சியமளித்தார்.
2001ஆம் ஆண்டு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி யாழ்ப்பாணம். திருமதி இளங்கோவன் சரோஜினி முன்னிலையில் நடைபெற்ற மேல் நீதிமன்ற வழக்கு இலக்கம் பீ-51-2001 இலக்கமுடைய அணி வகுப்பு அறிக்கையினை T-5 என அடையாளம் இடப்பட்டது.
14ஆவது ஆவணப்பட்டியலான 11-12-2001 ஆம் ஆண்டு நீதவான் நீதிமன்ற நடைபெற்ற அடையாள அணிவகுப்பு அறிக்கை நீதிவான் நீதிமன்ற சுருக்கமுறையற்ற விசாரணையின் போது மேற்கொள்ளப்பட்ட ஆவணப்பட்டியலை 167ஆவது குற்றவியல் நடைமுறை சட்டக்கோவையின் கீழ் 14ஆவது ஆவணப்பட்டியலாக இணைக்க அனுமதி வழங்கப்பட்டது. அவ் அறிக்கை T-5 என அடையாளப்படுத்தப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago