2025 மே 05, திங்கட்கிழமை

கஞ்சா வைத்திருந்த குடும்பஸ்தரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

George   / 2016 ஜூலை 21 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மாதகல் குசுமன்துறை கடற்பகுதியில் 55 கிலோ 490 கிராம் கஞ்சாவுடன் புதன்கிழமை (20) கைது செய்யப்பட்ட குடும்பஸ்தரை 72 மணித்தியாலங்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு, மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ரீ.கருணாகரன், புதன்கிழமை (20) அனுமதியளித்துள்ளார்.

பருத்தித்துறை இன்பசிட்டி பகுதியை சேர்ந்த தர்மராஜா ரவிகரன் (வயது 39) என்பவரே கைது செய்யப்பட்டார். மீட்கப்பட்ட கஞ்சா சுமார் 8.25 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது.

குசுமன்துறை கடற்கரையூடாக கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கடற்கரையில் சிவில் உடையில் காத்திருந்த பொலிஸார், சந்தேகநபரை மடக்கிப் பிடித்துடன், கஞ்சாவையும் மீட்டனர்.

சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால், அவரை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டதுக்கிணங்க நீதிவான் அனுமதி வழங்கியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X