Editorial / 2017 மே 31 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு-13 , கொட்டாஞ்சேனை பகுதியில், வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் இருவரும் திரும்பிவரப்போவதில்லை என்று, குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி நிஷாந்த சில்வா, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில், நேற்று (30) அறிவித்தார்.
2009ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் வானொன்றில் பக்கரிசாமி லோகநாதன், இரத்தினசாமி பரமானந்தன் ஆகிய இருவரும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். அந்தக் கடத்தற் சம்பவத்துடன் தொடர்புடைய வான், வெலிசறை கடற்படை முகாமுக்குப் பின் பகுதியில் இருந்தாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளில் தெரியவந்தது.
கொழும்பு பிரதான நீதிமன்ற மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி முன்னிலையில் வழக்கு நேற்று (30) எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர் மீதுள்ள கடத்தல் குற்றச்சாட்டை அகற்றுமாறு கோரப்பட்ட விண்ணப்பம், நீதவானால் நிராகரிக்கப்பட்டது.
வௌ்ளை வானில்,வெடிகுண்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டமைக்கு அமைய, உயர் அதிகாரிகளின் ஆலோசனையின் படி, வான் சோதனை செய்யப்பட்டிருந்தாலும், முகாமுக்குள் வைத்து அது வெட்டப்பட்டது ஏன் என, நீதவான் கேள்வியெழுப்பினார்.
அத்துடன், தயானந்த என்ற கடற்படை அதிகாரியால், கடத்தப்பட்டதாகக் கூறப்படும் இருவரில் ஒருவரின் அலைபேசி பயன்படுத்தப்பட்டுள்ளது என, விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது என்பதாலும், மேற்கூறிய விண்ணப்பத்தை நீதவான் நிராகரித்தார்.
கடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒருவரின் அலைபேசிக்கு, கடத்தப்பட்டதாகக் கூறப்படும் நேரத்துக்குமுன் சில அழைப்புகள் வந்துள்ளன என்றும் அவை தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என, சந்தேகநபரின் சட்டத்தரணி துஷித்த குணவர்தன, மன்றில் கூறினார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago