Princiya Dixci / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் காணாமற்போயிருந்த ஹம்பாந்தோட்டை இளைஞன் உட்பட மூவரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஹம்பாந்தோட்டை மாவட்ட நீதவான் மஞ்ஜுல கருணாரத்ன, நேற்றுப் புதன்கிழமை (21) உத்தரவிட்டார்.
நெல் மூடைகளைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில், ஹம்பாந்தோட்டை - பந்தகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி இளைஞன் உட்பட மூன்று பேரை, ஹம்பாந்தோட்டை பொலிஸார், கடந்த 5ஆம் திகதியன்று கைது செய்திருந்தனர். இந்நிலையில், குறித்த இளைஞன் காணாமற்போயிருந்தார்.
கடந்த 5ஆம் திகதி காணாமற்போனதாகக் கூறப்படும் மேற்படி இளைஞன், மாத்தறை, திக்வெல்ல பிரதேசத்திலுள்ள விகாரையொன்றிலிருந்து, வியாழக்கிழமை (15) கண்டுபிடிக்கப்பட்டார். பொலிஸ் காவலில் இருந்தபோது, அவ்விளைஞன் தப்பிச் சென்றதாகவே, முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்தது.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை (15) மாலை, உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞனிடம், வியாழக்கிழமை இரவு 8 மணியிலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிவரை விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதைத் தொடர்ந்து, மாவட்ட நீதவானின் வாசஸ்தலத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே, அவ்விளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு, ஹம்பாந்தோட்டை மாவட்ட நீதவான் மஞ்ஜுல கருணாரத்ன உத்தரவிட்டார்.
10 minute ago
36 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
36 minute ago
40 minute ago
2 hours ago