Kogilavani / 2017 ஜூன் 28 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா திபான்
கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பகுதியில், வெள்ளை வானில் தமிழர்கள் இருவர் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படை லெப்டினன் கொமாண்டர் தம்மிக அனில் மாபாவை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், நேற்று (27) பிணையில் விடுவித்தது.
கொழும்பு பிரதான நீதிமன்ற மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல முன்னிலையில் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
தமது சேவை பெறுநருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிணை உத்தரவு கிடைத்துள்ளதாகவும் அந்த நிபந்தனைகளின் அடிப்படையில் அவரை விடுவிக்குமாறும் சட்டத்தரணி ரசிக்க பாலசூரிய மன்றில் கோரினார்.
பின்னர், பிணை உத்தரவு வாசிக்கப்பட்டது. 40,000 ரூபாய் ரொக்கப்பிணையிலும் 5 இலட்சம் பெறுமதியான சரீரப் பிணைகள் மூன்றிலும் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன், மாதாந்தம் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணிமுதல் நண்பகல் 12 மணிக்குட்பட்ட காலப்பகுதிக்குள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி கையொப்பம் இடவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
பக்கரிசாமி லோகநாதன், இரத்தினசாமி பரமானந்தன் ஆகியோர், 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் வானொன்றில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். அந்தக் கடத்தற் சம்பவத்துடன் தொடர்புடைய வான், வெலிசறை கடற்படை முகாமுக்குப் பின் பகுதியில் இருந்தாக விசாரணைகளிலிருந்து தெரியவந்தது.
6 minute ago
23 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
23 minute ago
1 hours ago
1 hours ago