Princiya Dixci / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.பாரூக் தாஜுதீன்
நீதிமன்றத்தில் ஆஜராகாமை காரணமாக, மேல் நீதிமன்றமொன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இரத்துச் செய்யுமாறு கோரி, 81 வயதான முதிய பெண்மணி ஒருவர், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
உயிரிழந்துள்ள தனது கணவனின் சொத்தை அபகரிப்பதற்காக, மோட்டார் வாகன உதிரிப் பாகங்களை விற்பனை செய்யும் முன்னணி வர்த்தகர் ஒருவரும் சட்டத்தரணி ஒருவரும் மேலுமிருவரும் போலியான பத்திரமொன்றைத் தயாரித்துள்ளதாக, கடவத்தை, மஹர பகுதியைச் சேர்ந்த இந்தப் பெண்ணினால் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கின் முடிவில், குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நான்கு பேருக்கும் எதிராக, சட்டமா அதிபரால் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, முறைப்பாட்டை மேற்கொண்ட பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜராகி, சாட்சியமளிக்குமாறு மேல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், இந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்கு அவருக்கு உடற்றகுதி கிடையாது என, முறைப்பாட்டை மேற்கொண்டஉபய நாரயண சந்திராணி சார்லொட், நீதிமன்ற மருத்துவ அதிகாரியின் சான்றிதழைச் சமர்ப்பித்தார்.
குற்றவியல் தண்டனைக் கோவையின் 409ஆவது பிரிவின் கீழ், அந்தப் பெண் வசிக்கும் இடத்தில் சென்றே சாட்சியங்களைப் பதிவுசெய்ய வேண்டுமென, இந்த வழக்கைக் கொண்டு நடத்திய சிரேஷ்ட அரச சட்டத்தரணி கோரி நின்றார்.
ஆனால், இந்தக் கோரிக்கையை நிராகரித்த மேல் நீதிமன்றம், அப்பெண்மணிக்கு எதிராகப் பிடியாணை பிறப்பித்தது.
இந்தத் தீர்ப்புக்கெதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது உயர் நீதிமன்றத்தில் உதவியை நாடியுள்ளதாக, அப்பெண் தெரிவித்துள்ளார்.
4 minute ago
20 minute ago
46 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
20 minute ago
46 minute ago
50 minute ago