George / 2016 ஜூலை 21 , மு.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல றக்பி வீரரான வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர்களின் தொடர்புகள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள என்று, இரகசியப் பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு, புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, மேற்கண்டவாறு கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பணியாட்தொகுதி அதிகாரியான உதய நாகஹவத்த என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
அதற்கு மேலதிகமாக, அப்பிரிவின் உறுப்பினர்கள் நால்வரிடமும் இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன என்றும் இரகசியப் பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
8 minute ago
34 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
34 minute ago
38 minute ago
2 hours ago