2025 நவம்பர் 03, திங்கட்கிழமை

பாடகர் சிலிக்கு பிணை

George   / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  பாடகர் சிலி திலங்க, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பெலவத்த விஜிதபுரவில் கடந்த 6ஆம் திகதி நபரொருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தில் சந்தேகத்தின்பேரில்  பாடகர் சிலி, கைதுசெய்யப்பட்டிருந்தார்.

தலங்கம பிரதேசத்தில் பஸ் சேவையாளர் மீது சிலி, தாக்குதல்  நடத்தியதாக தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சிலியை கைதுசெய்திருந்தனர்.

தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்செய்தபோது, இன்று செவ்வாய்க்கிழமை (25) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை மேலதிக நீதவான் தம்மிக்க ஹேமபால, உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை அவரை நீதிமன்றில் ஆஜர்செய்தபோது. அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X