George / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊடகத்துறை முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகனும் கிரிக்கெட் வீரருமான ரமித் ரம்புக்வெல்லவுக்கு 29 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவர், தன் மீதான ஐந்து குற்றச்சாட்டுக்களிலும் குற்றவாளி தானே என்று, நீதிமன்றத்தில் இன்று ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் (போக்குவரத்துப் பிரிவு) இந்த உத்தரவை இன்று செவ்வாய்க்கிழமை(11) பிறப்பித்தார்.
கொழும்பு, கறுவாத்தோட்டம் பகுதியில், கடந்த மாதம் 22 அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
அதனையடுத்து, அவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக பறிமுதல் செய்யுமாறு போக்குவரத்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
8 minute ago
34 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
34 minute ago
38 minute ago
2 hours ago