Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2017 ஏப்ரல் 05 , பி.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா திபான்
மாலபேயிலுள்ள சைட்டம் (மருத்துவம் மற்றும் தொழில் நுட்பத்துக்கான தெற்காசிய நிறுவகம்) நிறுவகத்திலிருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பெறப்பட்ட உடற்பாகங்கள் தொடர்பிலான மரபணு (டீ.என்.ஏ) பரிசோதனைகளின் அறிக்கை, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில், நேற்று (05) சமர்ப்பிக்கப்பட்டன.
பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் உடற்பாகங்கள் என்ற சந்தேகத்திலேயே இவை பெறப்பட்டு பரிசோதனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. அந்த அறிக்கையையே குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மன்றில் சமர்ப்பித்தனர்.
இந்த வழக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் பிரசாத் சில்வா முன்னிலையில் நேற்று (05) எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கொலை தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்று, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்னாயக்க, மன்றில் அறிவித்தார்.
அத்துடன், குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் மேலதிக விசாரணை அறிக்கையும் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி முன்னிலையில் வழக்கமாக எடுத்துக்கொள்ளப்படும் நிலையில், அவர் நேற்று சமுகமளித்திருக்காமையால், மேலதிக நீதவான் பிரசாத் சில்வா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
மரபணு அறிக்கை சீல் வைக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டதால், அதிலுள்ள விடயங்கள் தொடர்பில் மன்றில் அறிவிக்கப்படவில்லை.
தாஜுதீனின் படுகொலை தொடர்பில் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுரசேனநாயக்கவின் விளக்கமறியலை, எதிர்வரும் ஏப்ரல் 18ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்ட நீதவான், வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தார்.
வசீம் தாஜுதீன், 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதியன்று நாரஹேன்பிட்டிய சாலிகா விளையாட்டு மைதானத்துக்கு அருகில் காரொன்றுக்குள் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
3 hours ago
4 hours ago