Gavitha / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதிச் சலவைக் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வெலே சுதா என்றழைக்கப்படும் சமந்த குமாரவின் தாய் மற்றும் அவருடைய மனைவி உள்ளிட்ட நால்வருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மேலும் அறுவர், இரகசிய பொலிஸாரினால், நீதிமன்றத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன் போதே வெலே சுதாவின் தாயாரன ஞானவதி, மனைவியான கயந்தி, சந்திமா தில்ஹானி மற்றும் ருவந்திகா லக்மானி ஆகியோரே தலா 10ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கிய கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், ஏனைய சந்தேக நபர்களை எதிர்வரும் 12ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago