Princiya Dixci / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றத்தில், சட்டமூலங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள், சுயவிருப்புரிமையின் பேரில் செயற்படுத்த முடியாது என்று சட்டத்தரணியொருவர், உயர்நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி தொடர்பிலான மனு, பிரதம நீதியரசர் கே.என். ஸ்ரீபவன் தலைமையில் நீதியரசர்களான அனில் குணவர்தன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் கொண்ட குழுவினரால், நேற்றுப்புதன்கிழமை ஆராயப்பட்டது. இதன்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணியே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில், சட்டமூலங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் சுயவிருப்புரிமையின் பேரில் செயற்படுத்த முடியாது நாடாளுமன்றத்தில் இடம்பெறும் செயற்பாட்டுகள், சட்டம் ஆதிக்கத்துக்கு உட்பட்டதாய் இருத்தல் வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி தொடர்பிலான திருத்தச் சட்டமூலத்தில், சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணாகவுள்ளது. சில சரத்துக்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு சர்வஜன வாக்கெடுப்பில் அல்லது நாடாளுமன்றத்தில் ஆகக் கூடிய பெரும்பான்மையில் நிறைவேற்றப்படவேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கவேண்டும் என்றும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டத்தரணியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இம்மனு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர், அந்த மனு மீதான தீர்ப்பு சபாநாயகருக்கு அறிவிப்ப்பதற்கும் உயர்நீதிமன்றம் தீர்மானித்தது.
9 minute ago
25 minute ago
51 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
51 minute ago
55 minute ago