2025 நவம்பர் 03, திங்கட்கிழமை

ஹெரோய்ன் வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

George   / 2016 ஓகஸ்ட் 05 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பத்து மில்லிகிராம் ஹெரோய்ன் வைத்திருந்த நபரை இம்மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.எச்.விஸ்வானந்த, பெர்ணாண்டோ நேற்று வியாழக்கிழமை (4) உத்தரவிட்டார்.                                   

திருகோணமலை, சி.வி.பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.

தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபரை புதன்கிழமை (3) கைது செய்துள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.               

சந்தேகநபர், பல தடவைகள் சிறைவாசம் அனுபவித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X