2025 நவம்பர் 01, சனிக்கிழமை

ஒருவர் கொலை: நால்வருக்கு மரணதண்டனை

Princiya Dixci   / 2017 மே 05 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெத பன்சல வீதியில் வசித்து வந்த சனத் தாபூறு என்பவரை கொலைச் செய்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த நால்வரையும், குற்றவாளிகளாக இனங்கண்ட, பாணந்துறை மேல் நீதிமன்றம் அந்த நால்வருக்கும் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

1999ஆம் ஆண்டு 10ஆம் மாதம் 30ஆம் திகதி, சனத் தாபூறுவை, அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர் என்றே இந்த நால்வர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு, அவருக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அதே இடத்தைச் சேர்ந்த, 46, 50 மற்றும் 38 வயதுகளையுடைய நபர்களுக்கே இவ்வாறு மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X