2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கணவனை கொன்ற மனைவிக்கு விளக்கமறியல்

Editorial   / 2017 ஜூலை 10 , பி.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணவனை, கோடரியால் கொத்திப் படுகொலை செய்த மனைவியை, எதிர்வரும் 24ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு, மொனராகலை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தையடுத்து, சந்தேகத்தின் பேரில் அவருடைய மனைவியை கைதுசெய்த பொலிஸார், அவரை நேற்றையதினம் ஆஜர்படுத்திய போதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

மொனராகலை, புத்தல, தம்பகல மாரிஅருவ பிரதேசத்தில், மனைவியொருவர் தன்னுடைய கணவனை, கோடாரியால், நெஞ்சில் கொத்தியதில், அவருடைய கணவன் (வயது 55) சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இந்தச் சம்பவம், சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குடும்பப் பிரச்சினை காரணமாகவே இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று தெரிவித்த தம்பகல பொலிஸார், இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X