2025 ஒக்டோபர் 30, வியாழக்கிழமை

குமார வெல்கமவின் தீர்ப்பு செப்டெம்பரில்

Editorial   / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தாக்கல் செய்துள்ள திருத்தபட்ட விண்ணப்பம் மீதான தீர்ப்பு, செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி அறிவிக்கப்படும் என, கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் கிஹான் குலதுங்க இன்று (26) உத்தரவிட்டார்.

குமார வெல்கம போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்து சபையில் புதிதாக பிரதி தலைவர் பதவியை உருவாக்கி அதன்மூலம் அரசாங்கத்துக்கு 33 இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்படுத்திய​தாக குற்றம்சாட்டியே, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X