2025 நவம்பர் 03, திங்கட்கிழமை

சஜினுக்கு அழைப்பாணை

Niroshini   / 2016 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜீன்வாஸ் குணவர்த்தனவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு, கொழும்பு- புதுக்கடை  நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மிஹின் லங்கா நிறுவனத்துக்காக 883 மில்லியன் ரூபாவுக்கு உபகரணங்கள் கொள்வனவு செய்ததில், நட்டம் ஏற்பட்டதாக கூறப்படும் விடயம் தொடர்பில் விசாரணை செய்யும் முகமாகவே, இவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜீன்வாஸ் குணவர்த்தனவுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு நீதவான் லங்கா ஜயரத்தனவால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X