Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2017 மே 05 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா திபான்
றக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்கவை, இம்மாதம் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி, நேற்று (04) உத்தரவிட்டார்.
தாஜுதீனின் கொலை செய்யப்பட்ட காலப்பகுதியில், ஜனாதிபதி செயலகத்தில் இருந்த பதிவுப் புத்தகத்தின் பக்கங்கள் கிழிக்கப்பட்டமை தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றிய அதிகாரிகள் 9 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்னாயக்க மன்றில் அறிவித்தார்.
அத்துடன், சம்பவதினத்தன்று, அவருடைய வாகனத்தைப் பின்தொடர்ந்த வாகனங்கள், அன்றைய தினத்தில் அந்தப் பகுதியில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்கள் தொடர்பான விசாரணைகளும் இடம்பெற்று வருவதாகவும் மேலதிக விசாரணைகளுக்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அறிவித்தார்.
2012ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதியிலிருந்து 22ஆம் திகதி வரை, அப்போதைய ஜனாதிபதியின் பாதுகாப்புக்கான பிரிவினர் கையெழுத்திடும் பதிவுப் புத்தகத்தின் பக்கங்கள் கிழிக்கப்பட்டு, செலோடேப்பினால் ஒட்டப்பட்டுள்ளன என்று, சீ.ஐ.டியினரின் விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டது.
கொழும்பு மருத்துவ சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகள் கடந்த மாதம் 21ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டது என்று தாஜுதீனின் குடும்பத்தினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் அறிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளை விசாரிப்பதை விட, அப்பிரிவின் பிரதானியை விசாரிப்பதற்கு உத்தரவிடுமாறு கோரினார்.
மருத்துவ சபையின் விசாரணை அறிக்கை, இம்மாத முடிவுக்குள் கிடைக்கப்பெறும் என்று அறிவித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி பாதுகாப்புப் பிரதானியிடமும் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.
நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதால், 14 நாட்களுக்கு ஒருமுறை மன்றில் ஆஜராவது கடினம் என, அவருடைய சட்டத்தரணியினால் நீதவானின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து, அவரை ஜீன் மாதம் 29ஆம் திகதி ஆஜராகுமாறு, நீதவானினால் உத்தரவிடப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago