Princiya Dixci / 2017 மே 03 , பி.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா திபான்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் எலன் மெதினியாராமய விகாரையின் விகாராதிபதியுமான உடுவே தம்மாலோக தேரரை, நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து அச்சுறுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட நபரை, வாழைத்தோட்டம் பொலிஸார், நேற்று (03) கைதுசெய்தனர்.
கிருலப்பனை, பொல்ஹேன்கொடவிலுள்ள எலன் மெதினியாராமய விகாரையில், லிபெருக்கிகளைப் பயன்படுத்தி, தொல்லை படுத்துவதாக, அப்பிரதேசத்தில் வசிப்போரில் நால்வரினால், தம்மாலோக தேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
அதிகாலை 5 மணிமுதல் 6 மணியான காலப்பகுதிலேயே ஒலிபெருக்கி ஒலிக்கவிடப்படுவதாகவும் இதனால் விகாரையை அண்மித்திருக்கும் குடியிருப்பாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும் அவர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படுகின்ற நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி இடம்பெற்ற அமர்வுக்கு சமுகமளித்திருந்த போது, குறித்த சந்தேகநபர், நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து தேரரை அச்சுறுத்தியுள்ளார்.
அந்த வழக்கு நேற்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த நபரை, தேரர் அடையாளம் காட்டியதற்கு இணங்கவே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜூன் 1ஆம் திகதிக்கு ஒத்திவைத்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம், நேற்று (03) உத்தரவிட்டது.
27 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago
2 hours ago