Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2017 ஜூன் 29 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரையும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, பிணையில் நேற்று (28)விடுவித்துள்ளார்.
வெளிப்படுத்த முடியாதளவு 30மில்லியன் ரூபாயைத் திரட்டினார்கள் என்று பணச்சலவை சட்டத்தின் கீழ், நாமல் ராஜபக்ஷ எம்.பி உள்ளிட்ட ஐவருக்கு எதிராகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இவர்கள், நீதிமன்றத்தில் நேற்று பிரசன்னமாய் இருந்த மூவரையும், தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இவ்வழக்கின் பிரதிவாதிகளாகப் குறிப்பிடப்பட்டிருந்தும், நீதிமன்றத்தில் ஆஜராகாமல், வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கின்ற, பிரதிவாதிகள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கட்டளையிட்ட நீதிபதி, மீண்டுமொருதடவை நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த நாமல் ராஜபக்ஷ எம்.பி, சுஜானி போகொல்லாகம, விமான பணிப்பெண்ணான சித்யா சோனாதீ சமரநாயக்க ஆகியோரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
6 hours ago