Princiya Dixci / 2017 பெப்ரவரி 21 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா திபான்
தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முஸம்மில், விமல் வீரவன்ச எம்.பியின் சகோதரரான சரத் வீரவன்ச, ஜயந்த சமரவீர எம்.பி உட்பட நால்வர் மீது, அரச நிதியை மோசடி செய்தமை தொடர்பில், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு, கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் நேற்று(20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், நான்காவது சந்தேகநபரை மார்ச் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மொஹமட் முஸம்மில், எம்.பியாக இருந்த காலப்பகுதியில் ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தி 6.2 மில்லியன் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அதேபோன்று, விமல் வீரவன்ச எம்.பியின் சகோதரரான சரத் வீரவன்ச, நாடாளுமன்ற உறுப்பினரான ஜயந்த சமரவீர ஆகியோரும் அரச வாகனங்களைப் பயன்படுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், மேலும் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
அனைத்து வாக்குமூலங்களும் பெறப்பட்டுள்ளதாகவும் மேலும் நான்கு பேரிடம் வாக்குமூலம் பெறவேண்டியுள்ளதாகவும் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதவானின் கவனத்துக்குக் கொண்டுவந்ததையடுத்தே, மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
25 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
2 hours ago