2025 நவம்பர் 02, ஞாயிற்றுக்கிழமை

விமலின் விளக்கமறியல் நீடிப்பு

George   / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-திபான் பேரின்பராஜா

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அவரை எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான்  லங்கா ஜயரத்ன, இன்று உத்தரவிட்டார்.

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 40 வாகனங்களை முறைக்கேடான முறையில் தமது உறவினர்களுக்கு வழங்கிய குற்றச்சாட்டில்  நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸாரால்  விமல் வீரவன்ச, கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதி பொது முகாமையாளரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X